உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரை

89

யானையின் பின்னே சென்று, அதைத் தண்டத்தைக்கொண்டு அடிக் கப்போனார்.

15. அப்போது, சிவகாமியாண்டார், எட்டாதிருக்கும்படி யான விசையில் வலிமைபொருந்திய யானையானது தொலைந்து போக, பெருமைபொருந்திய உண்மையான தொண்டரானவர், மூப்புப் பருவத்தால் சீக்கிரமாக யானையின்பின் தொடர்ந்தோடு வதற்குச் சக்தியில்லாதவராய்த் தவறிவிழுந்து, தமதுகைகளைத் தரையில் மோதியடித்து எழுந்திருந்து நின்று, சொல்லுதற்குக் கூடாததுக்கம் அதிகப்பட்டுக் கோபித்து, முன்பாகச் சிவதா வென்னுமொழியைச் சொன்னார். (சிவதா என்பது நன்மையைச் செய்கின்றவனே யெனப் பொருள் கொடுக்கும் வடமொழியாம். அது இங்கே சுவாமியைக் குறித்து இடு முறைப்பாட்டில் வந்தது; அவர் ஆபத்துவேளையில் அடியார்களைக்காப்பாற்றுகிறவராதலால்.)

16. "செருக்கடைந்த யானையினிடத்தில் நின்றும் உரித்த் தோலினை தரித்த சுவாமீ, அடியேனுக்கு நன்மையருள் செய்யும். எளியவர்களை வலியர்களாகும்படி செய்கின்ற ஆண்டவரே, உதவி யருளும். அன்பினையுடைய அடியாரது அறிவாக நின்றவரே, சகாயஞ் செய்தருளும். தெளிவாகிய நிறைந்த அமர்தம் போன்ற வரே, காப்பாற்றி யருளும். (கர்மமே பிர்மம் எனச் செருக்குற்ற தாருகாவனத்து ரிஷிகள், சுவாமியைக் கொல்லுவதற்காக, யாக மொன்று செய்து, அதனில் நின்றும் ஓர் யானையை எழுப்பியனுப்ப, அதைக்கொன்று தோலினையுரித்துப் போர்த்துக் கொண்டாராத லின், கஜத்தினது சருமம், போர்வையாகக் கொள்ளப்பட்டது. யானையினீருரியாய் என்றார், யானைக்கு நீர் வைரியாதலால், இந்த யானைக்கும் நீர் அங்ஙனம் ஆகவேண்டுமென்னுங் கருத்துள்ளவர் என்பது தோற்றுதற்கு. சிவதாவென்பது இவ்விடத்திற் குறிப்பு வினைமுற்று.)

17. "கங்காநதியையும் சந்திரனையுந் தரித்தசடையின் மேல், அர்ச்சிக்கிறதற்குத் தகுதியாகிய புஷ்பங்களை, யானை சிந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/99&oldid=1559737" இலிருந்து மீள்விக்கப்பட்டது