உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அன்பு முடி

ருக்குரியதாய்ச் சத்துருக்களுடைய முன்னணிச் சேனையை நாசஞ் செய்கின்ற பட்டவர்த்தனமெனப் பெயர் அடைந்து பெருமை பொருந்திய வெவ்விய யானையானது, திருவிழா நடக்கின்ற மகா நவமியின் முதல் நாளில்,-

12. காவேரித் துறையில் நீராடி, மங்களகரமான அலங் காரத்தைப்பெற்று மிகுந்த களிப்போடு மதங்கள் சொரிய, எதிரே வாரா நின்றவர்கள் நாற்புறத்திலும் விலகிப்போக, யானைக்கு முன் குத்துக்கோற்காரர் ஓட, உயர்ந்த பெருமை பொருந்திய மலைபோலக் காணப்பட்டு விரைவாக வந்து, (பரிக்காரராவது யானைக்கு முன்பாகப் போய்க்கொண்டு,அதன் வருகையை எதிரே வருகின்ற மனிதர்க்குத் தெரிவித்து விலகும்படி செய்து, அது மாறுபடுங் காலத்தில் அடக்கும்பொருட்டு ஈட்டியைக் கையில் வைத்துக்கொண்டிருப்பவர்களாம். பரித்தல் - தாங்குதல். காரர்- செய்பவர். எனவே ஆயுதத்தைத் தரித்திருக்கிறவர்களெனப் பொருள் பெற்றாம்: பரிக்காரர் என்பது குதிரையில் ஏறிச்செல் வோரெனினும் பொருந்தும்.)

13. வெற்றி பொருந்திய மதங்கொண்ட அந்த யானையா னது, தன் மேலேறிக் கொண்டிருக்கின்ற பாகரோடும் போய், ஒரு வீதியில் விரைவாகச்சென்று, தனக்கு முன்னே சிவகாமியாண்டார் போய்க்கொண்டிருக்கக் கண்டு, அவர் பின்னே தொடர்ந்தோடி, அவர் கையில் தாங்கிய வன்மையாகிய ஒப்பற்றகோலில் தொங்கிக் கொண்டிருக்கும் புஷ்பக்குடலையைப் பிடித்துப் பறித்துச் சிதறின அளவில்,-

14. ஏறியிருக்கின்ற பாகர்கள், அந்தச் செய்கையைப் பார்த்து, விசைகொண்ட யானையைச் சண்டமாருதத்தாற் கொண்டு போகப் பட்டவர்களைப்போல், தங்களை விரைவித்து கொண்டு போகும்படி முடுக்க, பூணூல்தரித்த மார்பினையுடைய சிவகாமி யாண்டார், அதைப் பார்த்துப்பதைத்துக் கோபித்து மதங்கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/98&oldid=1559736" இலிருந்து மீள்விக்கப்பட்டது