உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரை

87

போல் விளங்குகின்ற சடையினையுடைய பரமசிவனடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்தில், குகையில் நின்று புறப்படுஞ் சிங்கம் போலத் தோன்றி,. ஆபத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் பலம் அழியவெட்டி ரக்ஷிக்கின்ற -பழமையாகிய வேதங்களால் துதிக் கப்பட்ட மகிமை பொருந்திய சுவாமியினுடைய மழுவாயுதம் போன்ற - மழுவைத் தாம் கையில் தரித்துக்கொள்ளப்பெற்றவர். (பரசு என்பது உருபும் பொருளுமுடன் தொக்கதொகை.)

8. எறிபத்தநாயனார் இவ்வாறு இருக்குங்காலத்தில், ஆநிலை யென்னுங் கோயிலில் வீற்றிருக்கின்ற சுவாமிக்கு உறுதியான அன்புபெற்ற சிவகாமியாண்டா ரென்கிற பெயர்பெற்ற புண்ணிய முள்ள ஓர் பெரியவர், புட்பங்களைக் கொய்து இவைகளால் கட்டப் பட்ட மாலைகளைச் சாத்தி, நிறைந்த பக்தியோடு நடக்கின்றவர்; ஒரு நாளில்முன் தாம் நடந்தது போல,

9. விடியற்காலத்தில் நித்திரைதெளிந்து, ஆற்றிற்குப்போய் நீரில் முழுகி, வாயை வஸ்திரங்கொண்டு கட்டி,மண நிறைந்துள்ள மலர்கள் மிகுந்திருக்கின்ற நந்தனவனத்திற் போய் ஆராய்ந்து, மணக்கின்ற நல்ல அரும்புகள் மலரும்போது, தெய்வங்களுக்கெல் லாம் நாயகராயிருக்கின்ற பரமசிவனுக்குச் சாத்துவதற்கு யோக் கியமான பூக்களைப்பறித்து,-(உம்மை அசை; எச்சவும்மையாக்கு வாருமுளர்.)

10. அழகாகிய பூங்கூடையைப் புஷ்பங்களால் நிரப்பிக் கொண்டு, இருதயத்தில் பரிசுத்தமாகிய அன்புபெற்று, மலர் போன்ற கையினிடமாகத்தண்டு ஏந்தி, அந்தச்சிவாலயத்தை நோக் கிச் சுவாமிக்கு மாலைசெய்து சாத்த வேண்டிய காலத்தில், தாம் போய் உதவும்படியாக, விரும்பிச் சீக்கிரத்தில் வந்துகொண்டிருந் தார்.

11. அத்தன்மையையுள்ள சிவகாமியாண்டார் வரும்போது, இப்பால், வளம்பொருந்திய அந்தப் பட்டணத்தில், நிலைபெற்ற அரசர்களாகிய சோழராஜாக்கள் மரபில் தோன்றிய புகழ்ச்சோழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/97&oldid=1559735" இலிருந்து மீள்விக்கப்பட்டது