உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

அன்பு முடி

பட்டிருக்கும்;. சோலைகளில் புட்பங்களால் வாசனையுண்டாயிருக் கும்; தேன் பொருந்திய மலர்கள் கூந்தலிற் சூழ்ந்திருக்கும்; சில ஸ்திரீகளுடைய முகமாகிய சந்திரர்கள் தெருவிற் பிரகாசிக்கும்.

4. மதத்தையுடைய யானைகள் நீர்த்துறையில் விளையாடும்; சந்தோஷத்தையுடைய மயில்கள் முல்லை நிலத்தில் ஆடிக்கொண் டிருக்கும்; முத்து முதலான மணிகள் நெருக்கமாகப் பதிப்பிக்கப் பட்ட சபையில் நடனஞ் செய்கின்ற மாதர்கள் கூந்தலில் வண்டு கள் முழங்கும்; மிகுந்த பிரகாசம் வீதியில் தோன்றக் கட்டப்பட்ட கொடிகள் சூரியன்மேல் உராய்ந்து ஆடும்; விசாலமாகிய நீண்ட பூலோகத்தார் கொண்டாடும் ஒப்பற்ற அந்த நகரத்தின் வளமா னது இத்தன்மையதாயிருக்கின்றது.

வளம்

5. நிலைபெற்ற சிறப்பினாற் பெருமை யடைந்து பொருந்திய அந்த நகரத்தில், தேவர்களும் கூட்டமாக வந்து பொன் மயமாகிய மதிலைவலஞ்செய்து தொழத்தக்க மகிமையினை யுடைத்தாய்க் களங்கமின்றிக் கலந்த அன்பிற் சிறந்த தொண்ட ருடைய மனதில் இடைவிடாமல் வீற்றிருக்கும் அத்தன்மையினை யுடைய பரமசிவன் எழுந்தருளி யிருக்கிறதற்கு இடமாயுள்ளது. யாதெனின், ஆநிலை யென்னுங் கோயிலாம். (கருவூரில் இருக்கும் சிவன் கோயிலுக்கு ஆநிலை என்று பேர்.)

6. சகல விஷயங்களும் அடங்கியிருக்கின்ற வேதங்களா லும் அளவிடுதற்கரிய பரமசிவனை, இனிமை பொருந்திய அந்த ஆலயத்தில், மயக்க வழியை நீக்குகின்ற ஆகமத்திற் சொல்லி யிருக்கிற விதிப்பிரகாரம், வழிபடுகின்ற செய்கையையுடையவராகி, இருள்போல் கரிய நிறத்தையுடைய விஷமானது அடங்கியிருக் கின்ற கழுத்தையுடைய சுவாமிக்கு, அடிமைத்தொழில் செய்ய உரி யவராகிய பக்தர்களுக்குப் பெரிய தொண்டு செய்கின்றவர் யாவ ரெனின், எறிபத்த நாயனார் என்று சொல்லப்பட்டவராம்.

7. செழுமை பொருந்திய உலகத்தி லெல்லாவிடத்திலும் நிலைபெற்ற சைவ சமயாமானது விருத்தியாக, நெருப்பின் நிறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/96&oldid=1559734" இலிருந்து மீள்விக்கப்பட்டது