உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இணைப்பு-1.

எறிபத்த நாயனார் புராணம்

மழவை - மகாலிங்கையர் உரை (பாட்டுக்கள் கட்டுரையில் வந்துள்ளன)

1. வளம் பொருந்திய நீரினைப்பெற்ற பூமியில், இளமை யாகிய ரிஷபத்தை வாகனமாகவுடைய சுவாமியினிடத்தில், அன்பு வைத்தவர்களுக்கு, ஆபத்து வந்தபோது, சீக்கிரத்தில் வந்து, அதை நீக்குவதற்குத் தக்க செய்கையைச் செய்கின்ற குணத்தை யுடையவராய், அளவற்ற புகழினை அடைந்து சிறந்த எறிபத்த நாயனாரது பெருமையானது, நம்மாற் சொல்லப்படுந் தன்மையை உடையதல்லதா யிருந்தாலும், எனக்குள்ள ஆசையாற் சொல்லத் தொடங்கினேன்.

2. மகாமேரு கிரியில் தன்னுடைய புலிக்கொடியானது நின்று பிரகாசிக்கப் புதியனவாக எழுந்துள்ள மலைகளை இடித்து நிரவி, அங்ஙனம் நிரவப்பட்ட இடமே நடப்போர்க்கு நேர் வழி யாகச் செய்து, முன்னிருந்த சுற்று வழியை யடைத்த சோழன் - புகழால் நிலைபெற்ற அனபாயச் சோழன்-இவர்களுடைய சிறந்த வமிசத்தார்க்குப் பெருமையுற்ற நகரமாயிருக்கின்றது, வெகு நாளா யிருக்கின்ற கருவூரென்று சொல்லப்பட்ட பிரகாசம் பொருந்திய மணிகள் பிரகாசிக்கின்ற வீதியினையுடைய ஊர்.

3. தேவர்கள், களிப்புற்று நிறைந்து வாசஞ்செய்யுந் தேவேந்திரனுடைய அமராவதி நகரமும், தாழ்வை யடையும்படி யாகப் பெரிதாயிருக்கின்ற மதிலை, மேகங்கள் சூழ்ந்துகொண்டி ருக்கும்; பந்தியாயிருக்கின்ற வீடுகள் ஆகாயத்தை அளாவி யிருக் கும்; வாசல்களில் தோஷமில்லாத ரத்நமாலைகள் தொங்கவிடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/95&oldid=1559733" இலிருந்து மீள்விக்கப்பட்டது