உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

அன்பு முடி

மேன்மையாகிய அந்த உத்தரவைச் சிரசாக வகித்துக்கொண்டு, அவ்வெறிபத்த நாயனாருக்கு நமஸ்காரஞ்செய்து, முன்குதிரையின் மேல் வந்த புகழ்ச்சோழர், வெள்ளைக் குடையினது நீழலின் கீழ், யானையின் மேலேறிக்கொண்டு போயினார்.

53. அவ்விடத்திலெழுந்த சேனைகள், எழு சமுத்திரமும் ஒன்றாய்ச் சேர்ந்து ஒலித்ததுபோல், சப்திக்கவும், இவ்வுலகத்தி லிருக்கின்ற சிவனடியார்களெல்லாம் சந்தோஷித்துத் துதிக்கவும், பொன்னம்பலத்தில் எக்காலத்திலும் நடனஞ்செய்கின்ற நடேச ருடைய அழகிய திருவடிகளைச் சிரசில் தாங்கிக்கொண்டு, புகழ்ச் சோழர், அழகிய அரண்மனையில் புகுந்தார்.

54. பரமசிவனுடைய பணிவிடையை மேன்மையாகக் கொண்டு, சிவகாமியாண்டாரும் போக, எமது கடவுளினுடைய பக்தராகிய எறிபத்த நாயனாரும், "என்ன ஆச்சரியம்! சிதம்பரத் தில் நடனஞ்செய்கின்ற நடேசருடைய அடியார்கள், எப்படிப் பட்டவர்களாலும் அறிதற்கு அரியவர்கள்" என்று புகழ்ச்சோழரு டைய பெருமையை நினைத்துத் தம்முடைய பணிவிடையின்மேற் சென்றார்.

55. எறிபத்தநாயனார், இப்போது, சிவகாமி யாண்டார்க்கு வந்த ஆபத்தைத் தீர்த்ததுபோல், அனேகம் வலிமையாகிய பெரியதிருத்தொண்டுகளைப் பூமியில் இடையூறுவந்தபோது அடி யார்களுக்குமுன்சென்று அத்தீங்குவரவொட்டாமல் உபகாரமாகச் செய்து, நாள்தோறும் உயர்ந்த தவவேடத்தைப் பெற்று, நன்மைமி குந்திருக்குங் கயிலாயத்தில், பாபங்களை ஜயித்த சிவகணங்களுக்கு முன்னே, முதன்மையான தலைவராக விருக்கப்பெற்றார்.

56. பரமசிவனால் ஆட்கொள்ளத்தக்க திருத்தொண்டு செய் கின்ற எறிபத்தநாயனார் செய்த வல்லமையும், தம்மைக் கொல்லும் படியாகத் தாமே வாளாயுதத்தைக் கொடுத்து வெட்டுப்படுதற்குக் கழுத்தினைக் கொடுத்து நின்ற புகழ்ச்சோழரது பெருமையும், எந்நாளும் யாவர்க்கும் அனுக்கிரகஞ் செய்கின்ற பரகசிவனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/110&oldid=1559748" இலிருந்து மீள்விக்கப்பட்டது