உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரை

101

அருளிச்செய்யப்பட வேண்டுமேயன்றி, உயர்ந்த இத்திருத்தொண் டின் குணத்தைக் குறித்து நினைத்தால், யாவரால் அளந்தறியக் கூடும்.

57. தேனாருந் தண்பூங் கொன்றைச் செஞ்சடை யவர்பொற்றாளி லானாத காத லன்ப ரெறிபத்த ரடிகள் சூடி

வானாளுந் தேவர் போற்று மன்றுளார் நீறு போற்று மேனாதி நாதர் செய்த திருத்தொழி லியம்ப லுற்றேன்.

தேன் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய கொன்றைப்பூ மகலை யைத் தரித்த செய்ய சடையையுடைய பரமசிவனது அழகிய பாதங்களில், குறையாத ஆசையுற்ற அன்பினையுடைய எறிபத்த காயனார் பாதங்களைச் சிரசில் தரித்து, தேவலோகத்தை ஆளு கின்ற பலவகைத் தேவர்களும் வணங்குகின்ற நடேசருடைய திருநீற்றினையே, எல்லாச் சிவவேடங்களிலும் சிறந்ததாக நினைத்து, அதைப் பாதுகாக்கின்ற ஏனாதிநாயனார் செய்த திருத்தொண்டின் செய்கையைச் சொல்லத் தொடங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/111&oldid=1559749" இலிருந்து மீள்விக்கப்பட்டது