உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இணைப்பு-2.

ஹரதத்த முனிவர் இயற்றிய

சிவபக்த விலாசம்.

24-ம் அத்தியாயம்.

-

கதையை

சிவ அன்பர்களைக் காப்பாற்றத் தம்ழயிரை விடுவோர், சிவனருளால், வினைக்கட்டின் நின்றும் விடுபட்டவ ராவர். உயி ராவர்.உயி ரைப் புல்லெனக் கருதித் துறக்கும் எறிவார் எனும் பெரியாரு டைய - கேட்டதும் பாவத்தைப் போக்கும் புண்ணியக் இப்போது சொல்லுகின்றேன். ஆனிலை என்னும் பெயருடைய புராரியின் கோயில், பூலோகத்தில் இருக்கிறது. அங்கே, மகேச தேவரை, எறிவார், நாள்தோறும் வழிபட்டு வந்தார். சிவனுக்கோ, சிவபக்தருக்கோ, பூலோகத்தில் துரோகம் செய்வாரைப் பூதலத் தில் கொல்வதற்கென்று, கையிலே மழுவை, அவர் தரித்திருந் தார். அவ்வூரில், சிவதர்மர் என்னும் பெயருடைய பிராமணர் ஒருவர், இருந்தார். தன்னுடைய கையாலேயே பறித்த பூக்களைக் கொண்டு, எங்கும் நிறைந்த இறைவனுக்கு அருச்சனை புரிவதேச பிறப்பிலிருந்து அவர் மேற்கொண்ட விரதம். இந்த விரதத்தி லிருந்தும் அவர் தவறவில்லை. மூன்று காலமும் தன்னுடைய ஈசு வரனாம் பெரிய தேவனை அருச்சித்துப் பூத்தொண்டே குறிக்கோ ளாய், இவ்வாறு இவர் இருந்துவர, நீண்டகாலம் கழிந்தது. அங்கே அநபாயனயர் என்னும் அரசர், பெரிய புகழுடையாராய்ச் சதுரங்க சேனையுடன், வீரத்தில் இந்திரனுக்கு ஒப்பாக இருந்தார். அவர் சங்கரனிடத்தும், பக்தரிடத்தும் பேரன்புடையார்; சிவத்துரோகி களைக் கண்டவுடனே, அவர்களைத் தண்டிப்பார்; நாள்தோறும்; பூசனை புரிவதில் ஈடுபட்டுப் பக்தர்களில் உத்தமராயினார்.மலையைப் போன்றுயர்ந்த அவருடைய படையானையில் ஒன்று, மதத்தால்களிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/112&oldid=1559750" இலிருந்து மீள்விக்கப்பட்டது