உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரை

103

புற்றது. அதனால், அவ்வூர் கலக்கமுற்றது. அதனுடைய மதநாற் றம் மூக்கிற் பட்டதும், மற்ற யானைகள் ஓடிப்போய் விட்டன. மலையைப் பிளக்கும் பருத்த அதன் இரண்டு தந்தங்களைத் தூரத் தே கண்டதும், நாள்தோறும் ஜனங்கள், அஞ்சி ஓடினர். மாவெட்டி கள் தூறு பேர், அதன் மத வெறியைப் பிறருக்கறிவிக்க வேண்டி, அந்த யானையின் முன்னும் பின்னும், பெரு முழக்கம் செய்து கொண்டே, கூரிய ஈட்டியைக் கையிலே தாங்கி, அதனுடன் திரிந் தனர். அரசனுடைய ஆணையின்படி, இரவும் பகலும் சேவகர்கள் நகரத்தைப் பாதுகாத்து வந்தனர்.

எறிவார், நடுப்பகலில், குளிப்பதற்காகக் குளத்திற்குச் சென் றார். சிவதர்மரும், அப்போது, பூக்களைப் பறிப்பதற்காகப் புண் ணியமான சிவநாமங்களை, மனத்தாலும் பாடிக் கொண்டே, வந்து சேர்ந்தார். குளித்தபின், மத்தியான சந்தியை முடித்துக்கொண்டு, பொய்கையின் கரையி லேறினார். அந்த யானை மதம் பிடித்திருந் தும், தண்ணீர் குடிக்கப் பொய்கையை அடைந்தது. அருகே தடுக்கப்பட்டோராய்ப் பக்கத்தில், வேறொரு வழியேபோய், மறைந் தார். பூங்குடலையைத் தூக்கிக் கொண்டுவரும் அவர், அருகே யானை வரக்கண்டு, உயர்ந்த குரல் எடுத்துச் “சங்கரா என்னைக் காப்பாய்' என்று ஓலமிட்டார். மதம் பிடித்திருப்பதன் பயனாக, அவ்யானை, ஆழ்ந்தொலிக்குமாறு உரக்கப் பிளிறிக் கொண்டே, விரைந்து வந்து, அந்தப் பூங்குடலையை வெடுக்கெனப் பிடுங்கி, நூறு துண் டாக எறிந்தது; பூக்களையும் சிதறியது. பூக்கள் சிதறியதும், அந்தச் சிவதருமர், அறிவு கலங்கி, மாவெட்டிகளை நோக்கி, "ஏ, கொடியோர்களே! தீயோராகிய நீங்கள், சிவார்ச்சனைக்கு விரோ தம் புரியும் இந்த யானையை என் இவ்வாறு செலுத்தினீர். என் செய்வேன்! எங்குச் செல்வேன். எனக்கொரு புகலுமில்லை. ஈது, உங்களால் செய்யப்படவில்லை. சிவத்துரோகியாம் அரசனால் செய் யப் பட்டீது” என்று கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/113&oldid=1559751" இலிருந்து மீள்விக்கப்பட்டது