உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

அன்பு முடி

இவருடைய இந்த அழுகுரல், நீண்ட தூரம் வரை கேட்டது.. எறிவார் அதனைக் கேட்டுவந்து, பூசாரை நோக்கி, "பெரியீர், சிவ பூஜையிலீடுபட்ட உங்களது புஷ்பங்கள் எவரால் கெடுகின்றன. அதனைச் சொல்லும். என்னுடைய விக்கிரமத்தை இப்பொழுது பாரும்” என்று கூறினார். சிவதருமர்,கொடிய யானையின் அந்தச் செயலை, எடுத்துச் சொன்னார். அது கேட்டு, காதிலே கையைப் பொத்திச் 'சிவ சிவ' என்றார். அப்போது அந்தக் கணத்திலேயே, கோபத்தினால், வேள்வித் தீப்போலப் பிரகாசித்தார். உயிர்போவ தேனும் அஞ்சாதவராய், அந்த மதயானையைப் பின்தொடர்ந் தோடினார். அதனுடைய காலிலே தாக்கினார். அது திரும்பிப் பெரு முழக்கம் செய்தது. துதிக்கையால் பிடிக்க வருகையில், அதன்முன்னே வந்து, கூரிய ஆயுதத்தால், தந்தங்களின் நடுவே வெட்டினார். அந்த அடியினால், அந்தப் பெரிய யானை, உயிரற்றுக் கீழே விழுந்தது. யானையின் கழுத்திலேறிக் கொல்ல விரும்பிய ஆத்தாயிகள் மூவரையும், பின் வந்த இருவரையும், கொன்றார். யானையோடு வந்த மற்றையோர், அச்சத்தால், அரசனிடம் சென்று கண்டோரைத் திகைக்கச் செய்யும் எறிவாரின் வீரச்செய்கை யைத் தெரிவித்தனர். அந்த அரசன், விரைந்துவந்து, கிருஷ்ண னால் குவலயாபீடம் கொல்லப்பட்டதுபோலக் கொலையுண்ட யானையையும்,சேவர்களையும், எறிவாரையும், பூவையிழந்து வருந் தும் சிவதருமரையும், பார்த்துப் போர்க்கோலம் கொண்டெழுந்த வீரர்களைத் தடுத்துவிட்டுக் கைகூப்பி, "என்னைச்சேர்ந்தவர், செய்த காரியம் நிச்சயமாக யான் செய்ததேயாம். நான் சிவபெருமானி டத்தும் அபராதியாய் விட்டேன். இந்தத் துரோகிக்குச் சாவைத் தவிர வேறு வழியும் காணேன். ஆகையால் எறிவாரே! இந்த மழுவினாலே என்னையும் வெட்டும்.நீர் தண்டித்தால்,நானும் கூட, மிகப் புண்ணியவானாவேன்' என்று கூறினார். இந்தச் சொற்களைக் கேட்டு, அருளாளரான எறிவார், தாமிறப்பதற்கு முந்துவாராய், அவருடைய கையிலிருந்தும் மழுவை வாங்கிக்கொண்டார்.தானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/114&oldid=1559752" இலிருந்து மீள்விக்கப்பட்டது