உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரை

105

தன் கழுத்தை அறுப்பான் முன்வந்த அவ்வரசனைப்பேரன்பரான எறிவார் அறிந்து, அறிவு குழம்பி நின்றார். "நான் இந்த அநபாய னயனை - சம்புவின் பேரடியானை - அறமே கண்ணாய் நின்றானை- சிவபக்தனை - அறியாமையால் இத்தகைய இவை, கொல்லப்பட்ட னவே! சிவபக்தர்களுடைய பொருளைக் கெடுத்தவனுக்கு, அவனு டைய மரணமே பிராயச்சித்தம். வேறு கழுவாய் இல்லை. இப் போது, இந்தமழுவினால், நானே, கழுத்தறுப்படுவேனாக" என்றார். "நானே துரோகி! பன்முறையும் நானே துரோகி! முன்னும் நானே துரோகி!!" என்று இப்படிச் சாவமுந்துவோராய், ஒருவரை ஒரு வர், ஆயுதத்தைப் பிடித்துத் தடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், அசரீரி வாக்கு ஒன்றெழுந்தது. "அநபாயனயனே! உன்னுடைய சாம்ராச்சியத்தையும் விட்டு, பக்தத்ரோகத்திற்காக, உன் உயிரை விட முந்தினாய். அரசனே! அதனால் இப்போது நான் உன்மீது விருப்பமுடையவனானேன். எறிவோரே! நானும் உமக்குவிருப்பன். செய்யமுடியாததைச் செய்தீர்! மழுவைவிட்டெறிந்து, இது முதல் மனத்தாலேயே வழிபாடு செய்யும்.நீர் முத்தராய்விட்டீர். அழிந் தன அனைத்தும் எழக்கடவன ஆக" என்று சொன்னதும் யானையும், ஐந்து சேவகர்களும், விரைவாக எழுந்து நின்றனர். எல்லோரும் வியப்படைந்தனர். தேவர் பூமாரி பொழிந்தனர். அரசர், எறிவா ரையும் சிவதருமரையும் வணங்கி, அவர்களோடு நண்பு பூண்டு, யானையின் மீதேறி வீடுசென்றார். எறிவாரும் மழுவை வீசி யெறிந்து விட்டு, அன்றிருந்து மூன்று ஆண்டுகள் வரை, அவ் விடத்திலேயே தங்கி, மனத்தினாலே, வழிபாடு செய்து வந்தார் பின்னர், யோகிகளாலும் அடைய முடியாத காட்சியோடொக்கும் தனிநிலையைச் சிவனருளால், அடைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/115&oldid=1559753" இலிருந்து மீள்விக்கப்பட்டது