உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இணைப்பு 3.

உபமன்னிய பக்த விலாசம்

29-வது அத்தியாயம்-வீரபக்தர் சரித்திரம்.

கௌபீனத்தால் பெருமை பெற்ற அமர்நீதி நாயனாரை வணங்கி, ஸ்ரீ வீரபக்தநாதருடைய வரலாற்றை உங்களுக்குச் சொல்லுகிறேன். புலிக்கொடி பொறித்த பொன்மலை யுடையான் அநபாயன் என்னும் அரசன்; வாள்கொண்டு மலைகளை வெட்டிக் காவேரி ஒழுகிவர அரண்வழி செய்தான். இவனுடைய ஊர் கருவூர் என்னும் பெயருடையது; செல்வத்திற்கு இருப்பிடமா யது. அந்தத் தெருக்களில் உள்ள இரத்தினங்கள் விளக்கு வரிசைபோலப் பிரகாசித்தன. அங்கே, பக்தர்கள் தியானிப்பதும், தேவர்கள் புகழ்வதுமான திருவரனிலை என்னும் சிவன் கோயில் பொன் மதில்களோடும் இருந்தது. அங்கே, சைவப் பார்ப்பனக் குடியிவே பிறந்த வீரபக்தர் என்பார், சிவம் விளங்கும் திருவுள்ள முடையாராய்ச் சிவனாணையை வளர்த்து வந்தார். திருத்தொண் டிற்கு, இடையூறு நேர்ந்தபொழுதெல்லாம், மழுவைத் தாங்கிவந்து, சிங்கத்தைப் போல, அவர்களது துன்பத்தைப் போக்குவாராயி னார். திருவரனிலையின் தனித்தொண்டர் சிவகாமர் என்னும் பெயர் உடையார்; மாலைசாத்தி வருவோர்; அன்பருக்கடியார் பூப்பறிப்பதில் ஈடுபட்டு வந்தார்.

கட்டிக்

விடியற் காலையில் குளித்துவிட்டு, வாயைக் கொண்டு, பூந்தோட்டத்திற்குள் விரைந்து சென்று பூப்பறித்தபின், குறித்த காலத்தில், சிவனை வழிபட வந்துகொண்டிருந்தார். மகாநவமித் திருவிழாவின் முதல் நாளன்று, சோழ அரச ரின் வெற்றியானை, ஆற்றில் நீராடி, எங்கும் பரவி முழங்கும் பறை யொலியோடு, வந்துகொண்டிருந்தது. ஒழுகி வடியும் மதநீர்த் துளியால், அருவி வீழும் மலையைப்போலத் தோன்றும்பெனியதாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/116&oldid=1559754" இலிருந்து மீள்விக்கப்பட்டது