உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரை

107

அந்த யானையானது, தன்னை யடக்க மாவெட்டிகள் படும்பாட் டைத் தூரத்தே எறிந்துவிட்டு, தெருக்களுக்குள்ளே நடமாடியது; தாலைவில், முன்னாக வந்துகொண்டிருந்த சிவகாமரின் தண்டிற் கட்டியுள்ள பூங்குடலையைப் பறித்துத் தரையில் சிதறியது. அச் சத்தால் கலங்கிய மாவெட்டிகளின் தலைவர்கள், பெரு முயற்சி யோடு ஓட்டிக்கொண்டு சென்றனர். அதனைத் தடிகொண்டடிக் கக் கோபத்தோடும், பின் தொடர்ந்தார். அவ்வாறு போகுமதனைக் கிட்ட முடியாதவராய் இடறிவிழுந்து, கையால் தரையில் அறைந் துகொண்டு சிவதா' என்றழுதார். "கதியற்றவர் தம் நிதியே! சிவதா! யானைத் தோலைப் போர்த்தோய் சிவதா! கருணைக்கடலே! சிவதா! அமுதம் அருள்வோய்! சிவதா! திங் களும் கங்கையும் வளைதரு முடிமேல் அணிதரும் மலர்த்திர ளிதனை அந்தோ! யானை சிதறியதையோ! சிவதா! சிவதா! என் அழுகையைக் கேட்கும் தலைவன் உளனேல், அரி தேடிய அவனது திருவடி தொழுது, அன்பர்கள் சூழ்ந்திருக்க, அவர்களில் யான் யார்" என்று புலம்ப, அதனைக்கேட்டு வீரபக்தர், அங்குவந்து கோபத்தால் மிக விளங்கிச் சிவபக்தரின் பகைவர்களுக்கு அச் சத்தையூட்டும் தலைவராய்த் தோன்றினார். "அந்தச் சிவத் துரோ கியைக் கொன்று காக்கின்றேன் இப்பொழுதே" என்று கூறி மர ணத்தின் வாயேபோன்ற மழுவினை விருப்புடன் கொணர்ந்து, சிலகாமரை நோக்கி "இவ்வாறு உம்மை வருந்தச்செய்த யானை எங்கே" என்று கேட்டார்? "நல்லறிவுடையோய் கடவுளுக்குரிய பூக்களை பூமியிற் சிந்தி, இந்த வழியே சென்றது" என்றார். அது கேட்டு "எவ்வாறு பிழைக்கும் யானை" என்று கூறிக் கோபத்தால் பிரகாசித்து, ஒளிர்தரு மழுவைத் தாங்கிப் பின்தொடர்ந்துசென்று, அந்த யானையைக் கண்டார். "முன்னே கடவுள் உரித்த யானை யைப்போன்றதோர் வேறொரு வடிவமோ ஈது! விண்ணவர் தடுப் பினும் இந்த யானையைத் துண்டு துண்டாக வெட்டுவேன்” என்று கூறிக்கொண்டே யானையின் பின்புறத்தே, காலால் தாக்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/117&oldid=1559755" இலிருந்து மீள்விக்கப்பட்டது