உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

அன்பு முடி

கோபத்தால் கிளர்ந்த மாவெட்டிகளோடும் அந்த யானை திரும்பி யது. அந்தப் பிராமண தீரர், அச்சம நீங்கி, யானையின் எதிராகக் குதித்தெழுந்து, மழுவினாலே துதிக்கையைப் பிளந்து, முன்னே வீழ்த்தினார். துதிக்கை அறுந்து, அது, கீழே விழுந்தது.

கழுத்தின்மேலேறி யிருந்த இருவரையும், பக்கத்திலிருந்த மூவரையும், அவர் கொன்றார். ஓட்டிச்சென்ற ஐவரோடு, அரச யானை அழிந்தது. இதனை அரசரிடம் கூறுங்கள்” என்று மற் றையோர், வாயிற்காவலரிடம் விரைந்துசென்று கூறினர். வாயிற் காவலாளர்கள், அதனைக்கேட்டு, அச்சத்தால் மனங்கலங்கியவர் களாய், உள் நுழைந்து, கூப்பியகையோடும், அரசரிடம் தெரிவித் தனர். அரசர் “பகைவர்களை யெல்லாம்வென்ற எனக்கு,இவ்விதம், இன்று நடந்ததென்னை? செய்யத்தகாததை எவர் செய்தனர்?' என்றுகூறிக் கோபத்தால், சிங்கத்தைப்போல, வெளிவந்தார்.

அந்த அரசனால் கட்டளையிடப்பட்ட சேனை, சதுரங்க பலத் தோடும், பலவித ஆயுதங்களோடும் முழங்கும் பேரி, சங்க காகளங் கள், என்ற இவற்றின் ஓசையினாலும், குதிரைகளின் கனைத்தலினா லும், யானைகளின் பிளிறுதலினாலும், போர்வீரர்களின் சிங்கநாதத் தினாலும், தேர்ச்சக்கரங்களின் ஒலியினாலும், கடலொலியைக் கீழ டக்கி, அவனருகே வந்தது. அந்தச்சேனையானது, பின்தொடர்ந்து வரத் தான் தனியே, காற்றோடொத்த உயர்ந்த குதிரையின் மீதேறி, திகைத்திருந்த ஊர் மக்கள் இடைவிடாது நெருங்கியுள்ள தெருவை அடைந்தான். அந்த மாவெட்டிகள் ஐவரோடும், கால் களாலே மலையை ஒத்த மதயானை, இறந்துகிடப்பதனை, முன்னே கண்டான். அரசன், வேறொரு பகைவரையும் காணவில்லை; இருகையானைபோல் மழுவை எந்தியிருந்த அந்த அன்பரையே கண்டான் "இந்தப் பக்தர் கொன்றவர் அல்லர்போலும். எவராலே இந்த யானை கொலையுண்டது" என்று அரசன் கேட்க, சாவாது தப்பிய மற்றைய வேலையாட்கள், "உம்முடைய யானையின் எதிரே நிற்க,வீரரில் எவனுக்குத்தான் ஆற்றலுண்டு? கோபம் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/118&oldid=1559756" இலிருந்து மீள்விக்கப்பட்டது