உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




.

உரை

109

இந்த அடியாரின் மழுவினாலேதான், இந்த யானை கொலையுண் டது." என்றனர். இதுகேட்டு, "வேணிப்பிராணின் பக்தர்கள் காரணமின்றிக் கொல்லார்" என்று எண்ணிச் சேனையை நிறுத்தி விட்டுக் குதிரையினின்று கீழே இறங்கினான். "மதம் பிடித்த அந்த யானையால் தொண்டருக்குக்கெடுதி நேரிட்டிருப்பின், யான் என் செய்வேன்! என்னுடைய தவத்தின் பயனால் அவ்வாறு ஒன் றும் நிகழவில்லை" என்று மனங்கலங்கியவனாய், வீரபக்தரை நோக்கி "நடந்ததை நான் அறியேன். கேட்டது அங்கொன்று. அது கிடக்க. ஐந்துமாவெட்டிகளோடு இந்த யானை,என்ன தீங்கு செய் ததோ ?" என்றான். அந்தப் பக்தரும், அந்த அரசரை நோக்கிச் "சிவகாமர், சிவனுக்கேற்ற பூக்களை பறித்துக்கொண்டுவந்தார். அவற்றைப்பறித்து இந்த யானை சிந்தியது. அரசனே! ஆதலின், நான், அதனைக் கொன்று வீழ்த்தினேன். மாவெட்டிகள், சக்தி யற்றவராய், இவ்வாறு, தவறிழைத்துக்கொலையுண்டார்கள்.' என்று கூறப்பெற்ற அரசன், அஞ்சினவனாய், அவரை வணங்கி, "இவ் வாறு பாவம் புரிந்தவனுக்காகத் துதிக்கையை வெட்டுவ து மட்டும் போதாது. புண்ணியமான மழுவால் என்னை வெட்டு வதும் என்னுடைய கொண்டே தக்கதன்று. அபராதியான என்னைக் கொல்லும்” என்று கூறி, உறையி னின்றும் வாளை, தானே எடுத்து. அவ்வரசன், அவரிடம் கொடுத்தான். "பக்தர்களில், இவருடைய பக்தி எல்லை அற்றது" என்றுகருதித் தம்மைத் தாமே கொல்ல, விரைந்து வாளை வாங்கிக் கொண்டார். வாளை வாங்கிக்கொண்ட அவருடைய முன்னே நின்று, அவரது திருவடியில் வணங்கி, "அபராதியான

.

வாளைக்

என்னை

இந்த வாளினால், கொன்று, என்னை, மன்னியுங்கள். என்னால் செய்யத் தக்கது உம்மால் செய்யப்பட்டது" என்று பூபதி கூறப் பக்தரும், "இது வியத்தகு செய்கை" என்று உள்ளம் நடுங்கினார். "மாவெட்டிகளோடு யானை கொலையுண்டு கிடக்கவும், பெருந் தவறு புரிந்துள்ளமையால், என்னையும் கொல்லும்' என்று கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/119&oldid=1559757" இலிருந்து மீள்விக்கப்பட்டது