உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

அன்பு முடி

இவ் அரசர், இந்த வாளினால், எவ்வாறு கொல்லத் தக்கார்? என் னுயிரைக்கொல்வதே தக்கது" என்று வாளைக் கழுத்திலே பூட்டி னார்."அந்தோ! கெட்டேன் " என்று அரசர் பெருமான் கூறி. வாளொடு விளங்கும் கையுடையாரை நோக்கி, "உலகம் போற்றும் நீர் இவ்வாறு, செய்வது தக்கதல்ல" என்று, அரசன், அவரது கையைத் தடுத்தபோதிலும், பக்தர், தம் தறுகணான்மையில் ஈடு பட்டே நின்றார்.

ஆணையால், வானத்தில்

து

அப்போது, சிவபெருமானது அசரீரி வாக்கு எழுந்தது."அன்பர்களை உலகத்திற்குத் தெரிவிக்க வேண்டி, யானையானது, பூக்களைச் சிந்தியது. திங்கட் பிறை அணிந்த திருமுடியாரின் திருவருளால், இச்செயல்கள் அனைத் தும், நிகழ்ந்தன' என்று கூறியபொழுது, யானையானது மாவெட் டிகளோடும் எழுந்தது. வாளை வீசியெறிந்து, பக்தர் அரசரை வணங்கினார் ; அரசரும் பக்தரை வணங்கினார். தேவர்கள் அந்த இரு பக்தர்மீதும் பூமாரி பெய்தனர்; கடவுள்வாக்கைப் பக்தரும் சோழ அரசரும் புகழ்ந்துகொண்டிருக்க, சிவகாமரும் தம் பூங்குடலை நிறையப்பெற்று, மகிழ்ச்சி யடைந்தார். பின் தூங்கி எழுந்ததுபோல, மதம் ஒழுகும் சுவட்டோடே, பேர் ஆரவாரத் தோடும், வெற்றி யானையை முன்னே கொண்டுவந்து நிறுத்தி, அரசனைக்கண்டு, மாவெட்டிகள் "பட்டவர்த்தனம் என்னும் யானை யின் அரசின்மேல், அரசர்க்கரசே! நீர் ஏறி அருள்க' என்றனர். வீரபக்தரும், விருப்போடும் இவ்வாறு கூற, அரசர் அதன் மீதேறிக் கொண்டார். கடலிற்கு ஒப்பாக ஒலிக்கும் படைவீரரின் நடுவே, வந்தி மாகதர் முதலோர் போற்றிவா, அந்தச் சோழர், நடராஜப் பெருமானின் திருவடி பொறித்த திருமுடியோடும், தம் வீட்டி னுள், இனிதே புகுந்தார். மிகவும் ஆழ்ந்த பக்தர் செய்த ஆண்மை யும், தன்னைத்தானே கொல்ல வேண்டிவந்த சிவ பக்தனாம் அரச ருடைய பெருமையையும், திருத்தொண்டின் உண்மைப்பொருள் களாம் இவை இரண்டையும் -தம்மடியார் வேண்டுவதே நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/120&oldid=1559758" இலிருந்து மீள்விக்கப்பட்டது