உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரை

111

தோறும் தந்தருளும் சிவனே அன்றி, வேறுயார் புகழ்வார்? சிவகாமர், அந்த வீரபக்தரை நோக்கி, "சிவபக்தியின் பெருமை அறிவதற்கு அரியது" என்றுகூறி, அரசரைப் புகழ்ந்து, உயிர்கட் குத் தலைவனார் திருத்தொண்டில் ஈடுபட்டார். இவ்வாறு சிவகா மர் வீரபக்தர் என்ற இருவரும், சிவபக்தர்களின் துன்பத்தைப் போக்கிப் பலநாள் உதவிப் பின் வெள்ளிமலையின் எல்லையிலே இறைவன் உலகில் கணநாதர்களில் தலைவராயினர். திருத்தொண் டர்களின் இடையூற்றை நீக்கும் வீரபக்தரின் கதையை, வாயால் ஓதுவாரும், உள்ளத்தால் நினைப்பாரும், பிறையணிந்தான் உலகம் பெறுவர்.

The B. N. Press, Educational Printers, Madras.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/121&oldid=1559759" இலிருந்து மீள்விக்கப்பட்டது