உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

அன்பு முடி

ஊர்மலை மேற்கொளும் பாக ருடறுணி யாக்குவித்தான் ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரி லெறிபத்தரே.

என்று திருத்தொண்டர் திருவந்தாதியில் பாடியதே ஆளு டைய நம்பிகளது முதனூலுக்கேற்ற வழி நூலாகும். இதற் குச் சார்பு நூலாகச் சேக்கிழார் பாடியுள்ள புனைந்துரை வரலாற்றை உமாபதி சிவனார் கீழ்வருமாறு சுருக்கிக் கூறு கின்றார்:

"திருமருவு கருவூர்ஆ னிலையார் சாத்தும்

சிவகாமி யார்மலரைச் சிந்த யானை அரனெறியோ ரெறிபத்தர் பாகரோடும்

அறஎறிய 'என்னுயிரும் அகற்றீர்' என்று

புரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப் புரிந்தரிவான் புக, எழுந்த புனித வாக்கால் கரியினுடன் விழுந்தாரும் எழுந்தார் தாமும்

கணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே."

ஒரு

பூக்

அன்பென்றால் ஆனைக்கொலையோ?:- குடலையை வலித்திழுத்த யானையோடு அதனைச் செலுத்தி வந்த ஐந்துமா வெட்டிகளையும் கொல்வதோ சிவத்தொண்டு? இக்கொலையைப் போற்றவோ இப்புனைந்துரை எழுந்தது? ‘அன்பே சிவம்' என்ற பெரும்பேச்செல்லாம், ஆனையை யும் ஆளையும் கொன்று குவிப்பதிலே முடிகின்றனவோ? காந்தி யடிகளது அன்பு நெறி பரவிய இந்த நாளில், இவ்வாறு, எண்ணங்கள் எழுவதும் இயல்பே.

-

நாவலர் கண்ட நாயனார்:- பெரிய புராணத்தின் பல வரலாறுகளுக்குச் “சூசனம்” எழுதிய ஆறுமுக நாவலரும், வரது கொலைத் தொழிலையே பேரறம் எனச் சிறப்பித்துக் கூறி, அதனை நிலைநாட்டச் சங்கற்ப நிராகரணத்திலிருந்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/12&oldid=1559651" இலிருந்து மீள்விக்கப்பட்டது