உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அன்போ கொலையோ ?

தேசிகர்க்குத் தீங்குசெயும் தீயவரை வெல்; அல்லது. நாசமுறு; சேர்வாய் நலம்."

" அந்தணரை மாதவரைக் கொல்லாதே வெல்; அல்லார் சிந்தவுஞ்செய்; நீ செறியாய் தீங்கு.

3

ola

00

என வரும் இரண்டு குறட்பாக்களை எடுத்துக் காட்டுகின்றார். "சிவனடியார்களுக்கு இடர் செய்வாரைக்கண்டு பிறரும் 'சிவனடியாருக்கு இடர் செய்து, கெடுவர். சிவபெருமானுக் குத் திருத்தொண்டு செய்ய விரும்புவோர்களுள் தீவிர பத்தி யுடையாரை ஒழிந்த பிறர், தாம் செய்யும் திருத்தொண்டு 'களுக்கு இப்படி இடையூறுகள் நிகழுமாயின், திருத் தொண்டுகள் செய்யாது தம் வாணாளை வீணாளாகக் கழிப்பர். சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லுதல் இத் தீங்குகள் எல்லாவற்றையும் ஒழிக்கும். ஆதலால் 'இக் கொலை, பாவமாகாமல் அது செய்தாருக்குச் சிவபதம் பயக் கும் என்று துணிக' 'என அமைதி கூறுகின்றார். இவ்வாறு கூறினாரேனும் பின் நாம் கூறுவதினின்றும், அவர்க்கும் இது கருத்தன்றாதல் நன்கு புலனாகும். “இச்சிவ புண்ணி யத்திலே மிக்ச் சிறப்புற்றவர். இவ்வெறிபத்த நாயனார்; இவர் சிவனடியார்களுக்கு இடையூறு வந்த காலத்தில் வெளிப் பட்டு, அவ்விடையூறு செய்தவர்களை மழுவினால் வெட்டு தலே தொழிலாகக் கொண்டமையாலும், சிவகாமி யாண் டார் சிவனுக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவைப் பறித் துச் சிந்திய யானை அரசனது பட்டயானை யென்பது பாரா மல், அதனையும், அது தீங்குசெய்யாதபொழுது விலக்காத பாதகர்களையும் கொன்றமையாலும் என்க” என்று. எறி பத்தரின் முன்னிலையாம் மறநிலையைப் புகழ்ந்துரைக்கும் நாவலர் பெருமானாரே மேற்சென்று, அவ்வடியாரது பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/13&oldid=1559652" இலிருந்து மீள்விக்கப்பட்டது