உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அன்பு முடி

னிலையாம் அறநிலையைப் புகழ்வாராய் "இன்னும் இவர் சிவனடியாரிடத்து மிக்க பத்தி உடையோர் என்பது, புகழ்ச் சோழநாயனாரது பக்தி மிகுதியைக் கண்டவுடனே, மிக அஞ்சி, 'தமது யானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக் குறித்துச் சிறிதும் துக்கம் உறாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி வேண்டுகின்ற இவ்வன்பருக்குத் தீங்கு நினைத்தேனே', என்று, அவ்வாளைத் தமது கழுத்திலே' பூட்டி அறுக்கத் தொடங்கினமையாலும் தெளியப்படும்" என்று வற்புறுத்துதல் காண்க. இவ்விருவேறு ஒழுக்க நிலைகளில் எதனைச் சிறந்தது என்று நாவலர் பெருமானார் கூறி யிருப்பர்? நிற்க.

எறிபத்தரது இருவேறு நிலை:- பெரிய புராணம் பேரன்பு நூலேயன்றிப் பெருங் கொலை நூலன்று. “ஈர அன்பினர்" எனத் திருக்கூட்டச் சிறப்பில், சேக்கிழார் பெருமான், தாம் புனைந்துரைக்கும் அடியார்களைப் புகழ்ந்துரைத்தல் காண்க. றிபத்தரது இரு வேறு மன நிலையைப் புனைந்துரைக்கின் றார் சேக்கிழார் பெருமான். நாயனாரது முன்னையநிலை வன்பு நிலை; பின்னைய நிலை அன்புநிலை. அதனைப் பின்னர்க் காண் போம். முன்னிலையிலும், "முழைவாழ் மடங்கல்" போலத் தோன்றி, இடையூறுகெட எறிவதற்கு மழுவேந்தி நின்ற பெரியராகவே எறிபத்தர் விளங்குகின்றார்.

"மல்லல்நீர் ஞாலந் தன்னுள் மழவிடை யுடையான் அன்பர்க்கு ஒல்லைவந் துற்ற செய்கை யுற்றிடத் துதவு நீரார் எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் சொல்லலாம் படித்தன் றேனும் ஆசையால் சொல்ல லுற்றேன்'1. என்றன்றோ சேக்கிழார் தொடங்குகின்றார். அடியார்களுக்கு ஏதேனும் இடையூறு நேரக்கூடிய இடத்து அவ்விடையூறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/14&oldid=1559653" இலிருந்து மீள்விக்கப்பட்டது