உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அன்போ கொலையோ ?

5

டாரல்

நேரா நிலை யாதோ, அந்நிலைக்கு ஏற்ற செய்கையால் அவர்களு க்கு உதவுவதையே இயல்பாகக் கொண்டவர் இவ்வெறிபத்தர்; வெட்டிக்கொல்வதேமேலாம் நோன்பெனமேற்கொண்டா லர்; இடுக்கண் களைவதே இன்பமென வாழ்பவர். இடுக்கண் களைகையில் கொலை நேரினும் நேரலாம். ஆனால் இவர் கருதி யது அன்பர்க்குச் செய்யும் அருட்பெருந் தொண்டே யன்றி மறப்பெருங் கொலையன்று. இவர் அன்பரது ஆக்கந் தேடி னாரே யன்றி அல்லாரது கேடு தேடினார் அல்லர். அல்லாரது கேட்டுக்கும் அஞ்சார் முன்னிலையில்; அல்லாரது கேடும் சூழார் பின்னிலையில். சீறிய அருட்டொண்டு புரிந்தார் முன் னிலையில்; ஆறிய அருட்டொண்டு புரிந்தார் பின்னிலையில். முன்னையது மறவருள்; பின்னையது அறவருள். இந்த மன

ற்றத்தைப் புகழ்ந்துரைத்தல், திருவருட் புலவர்க்கே இயலுவதொன்றாம். இதனைச் சேக்கிழார் எங்ஙனம் புனைந் துரைக்கின்றார் என்பதுபற்றியே இந்த ஆராய்ச்சி எழு

கின்றது.

திருவருண் மொழி யுலகு:-சேக்கிழார் படைத் தருளிய திருவருட் பெருக்கெடுக்கும் பாட்டுலகிற் சென்று, பெரிய புராணப் புனைந்துரைகளை, அவற்றோடொன்றாய் இயைந்து ஒதுதல் வேண்டும். அங்கு நேரும் கொலையும் கொடுமையும், துன்பமும் தொல்லையும், ஒருவகையால் நோக்குமிடத்துக் கண்மயக்கேயாம். அன்பர்களது உள்ளத்தொளிவிளக் .கானது உலகெங்கும் நிலவினைச்சொரிந்து முருகி எரிகின்றது. அச் செந்நிலையைக்கண்டு அவரோடு இயைந்து இன்பமாய் நிற்றலை விரும்பும் சிவபெருமான், அவ்வன்பின் திரியானது சுடர்விட்டு எரிதற்கு வேண்டுவதொரு நிகழ்ச்சியை நடத்து கின்றான். திருவருளின் திருவிளையாடலே ஈது. புல்லே மழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/15&oldid=1559654" இலிருந்து மீள்விக்கப்பட்டது