உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அன்பு முடி

வாம். தந்தை காலற்று வீழ்வான். மகன் அரியுண்டு கறியா வான். சுற்றத்தார் துண்டுண்டு துவளுவர். மணமகளாம் கூந்தலழகி மயிர்த்தோகை இழ்ப்பாள். கடவுள் காட்டும் கண்கட்டே இவையனைத்தும். சிறிது தாழ்த்ததும் அரியுண்ட மகன் தெரு நின்றும் வருவான். அறுத்த கூந்தல் கறுத்து வள ரும். வெட்டுண்டு புரண்டயானை சட்டென்று எழுந்து நிற் கும். துஞ்சிய மாவெட்டிகள் துயிலுணர்ந்து யானை ஒட்டுவர். யானை பறித்துச் சிந்திய பூங்குடலையும் நிறை பூங்குடலையாம். "தொழுந்தகை யன்பின் மிக்கார்

தொண்டினை மண்மேற் காட்டச்

செழுந்திரு மலரை யன்று

சினக்கரி சிந்தத் திங்கட்

கொழுந்தணி வேணிக் கூத்த

ரருளினாற் கூடிற் றென்றங் கெழுந்தது. பாகரோடு மியானையு மெழுந்த தன்றே.

" இருவரும் எழுந்து வானில்

எழுந்தபே ரொலியைப் போற்ற அருமறைப் பொருளாய் உள்ளார்

அணிகொள்பூங் கூடை தன்னின் மருவிய பள்ளித் தாம

நிறைந்திட வருள மற்றத் திருவருள் கொண்டு வாழ்ந்து

சிவகாமி யாரும் நின்றார்."

மட்டவிழ் அலங்கல் வென்றி

மன்னவர் பெருமான் முன்னர்

உட்டரு களிப்பி னோடும்

உறங்கிமீ தெழுந்த தொத்து

48.

50.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/16&oldid=1559655" இலிருந்து மீள்விக்கப்பட்டது