உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. நாடு

பாட்டாராய்ச்சி:-எறிபத்தர் என்று எவரேனும் எப் போதேனும் இருந்தாரா, என்ற ஆராய்ச்சியும் வேண்டுவ தில்லை. பொய்யையும் மெய்யையும் (Fact) கடந்த உண்மை நிலையையே (Truth) பாட்டுலகில் காண்போம். அங்கு மெய் யும் இல்லை; பொய்யும் இல்லை; இவை அழிவன. உண்மையே. உளது. ஈது அழியாதது. அவ்வுண்மை நிலையைச் சேக்கிழார் எவ்வாறு புனைந்துரைக்கின்றார் என்பதே பாட்டாராய்ச்சி யாகும். ஆகவே அவர் பாடல்களையே ஆராய்வோ

யானையை எறிதல்:-

"பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப்போற்று மந்நெறி வழியே யாக அயல்வழி யடைத்த சோழன் மன்னிய வநபா யன்சீர் மரபின்மா நகர மாகுந்

தொன்னெடுங் கருவூ ரென்னுஞ் சுடர்மணி வீதி மூதூர்".2.

புகழுடம்போடு கூடிய எறிபத்தர் ஒரு யானையை வெட்டி எறிகின்றார்! அரசனுடைய யானையை வெட்டி எறிகின்றார்! அரசனுடைய யானைகளில் தலைசிறந்ததாய் அழகொடு விளங்குவதாம் கொற்ற யானையை வெட்டி றிகின்றார்! அவன் வழிபடும் யானையை வெட்டி எறிகின் றார்! உலகப் பெருந்தாயை ஒன்பது இரவிலும் வழிபடுங் திருநாளின்போது, அக்கொற்ற யானையை வழிபடுவதும் வழக்கமாய் இருக்க, அந்தத் திருநாளின் போதே வெட்டி எறிகின்றார்! அழகு மட்டுமோ-வழிபாடு ஏற்பது மட்டுமோ - அரசனது வெற்றிக்கே ஒரு துணையாக நின்று பகைப்புல முருக்கிப் பல்புகழ் படைத்த தன்றோ அவ்யானை? அவ் யானையையன்றோ வெட்டி எறிகின்றார் எறிபத்தர்! அரசனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/18&oldid=1559657" இலிருந்து மீள்விக்கப்பட்டது