உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நா

-டு

9:

னும்குறுநில மன்னனோ?மன்னவர்க்கு மன்னவ னவனாய்ப்பொன் மலையைத் தனதெல்லையாகக் கொண்டு புலிக்கொடி நாட்டிய சோழனது யானையையன்றோ அவர்வெட்டி எறிகின்றார்! அவ னூரிலேயே யன்றோ வெட்டி எறிகின்றார்! பண்டை நாள் தொடங்கி, அவனுக்கு ஆட்பட்ட ஊரிலேயேயன்றோ வெட்டு கின்றார்! நத்தப் பாழான ஊரோ அது? அவன் மிக விரும்பி யதன் பயனாக, அவ்வூரின் தெரு முழுவதினும் மணிகளை யிழைத்து அணி செய்து, அறிவில் முதிர்ந்தோரைக் குடி யேற்றி வைத்ததனால், கல்வியாலும் செல்வத்தாலும் முதிர்ந்த ஊராம் அக்கருவூரிலன்றோ வெட்டிஎறிகின்றார் அவ்வன்பர்! தொன்னெடுங்கருவூர் எனப் பழமையைச் சுட்டினார் சேக்கி ழார். ஆதலின் பின்வரும் மூதூர் என்பதற்கு, அறிவில் முதிர்ந்த ஊர் எனப்பொருள் கொள்வதே அவருடைய கருத் துப் போலும்.)

யானையே உயிர்நிலை:- சேக்கிழார் பெருமான், தமது நூலில், நாடும் நகரமும் பாடும்போதெல்லாம், தமது புனைந் துரை வரலாற்றுக் கேற்ப அவற்றைப் புகழ்ந்துரைத்தல் காண்க. இவ்வியானையே இப்புனைந்துரை வரலாற்றின் உயிர் நிலையாகும். இவ்வாறு போற்றப்படுகிற யானையை அஞ்சாது வெட்டி எறிகின்ற அடியாரின் ஆண்மையையும், அதனையும் பொருட்படுத்தாது வணங்கி நிற்கின்ற புகழ்ச்சோழனாரின் அன்பையும், இவ்வியானையின்மேல் வைத்தன்றோ உணர்த்து கின்றார் சேக்கிழார்; அதற்கேற்பக் கருவூரையும் யானையின் மேல் வைத்தேயன்றோ புகழ்கின்றார்.

பொன்மலைப் புலி:- அநபாயனது முன்னோனாகிய புகழ்ச் சோழன், மண்ணுலக மன்னவனாக விளங்கு கிறான். சேக்கிழார் தமது மன்னனாம் அநபாயனை இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/19&oldid=1559658" இலிருந்து மீள்விக்கப்பட்டது