உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அன்பு முடி

மறக்காது குறித்துவைத்து அவன் பெயர் மறையாதபடி செய்கின்றார்; உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கின்றார். உள்ளளவாவது இவரது நூல் உள்ளளவும் என்க. சோழர் களது பெருமையையும் அவர் கூறுகின்றார். பண்டைநாள் தொட்டு இவர்களுடைய நாடு,பனிமலை வரையும் சென்றிருந் தது. அப்பனிமலையாம் பொன்மலையை எல்லைக் கல்லாகக் கொண்டு அதன்மீது தனது புலிக்கொடியைநாட்டினான் ஓர் அரசன். வெற்றிமட்டும் போதுமோ? காடுதிருத்தி நாடாக்க வேண்டாவோ? நாடுசெழிக்க வேண்டாவோ? ஆம்.அவ்வெற் றியை உண்டு பண்ணியது அந்நாட்டு வளப்பமேயாம். அந் நாட்டை அவ்வரசன் வளம்படுத்தியதை ஒட்டக்கூத்தர்,

மேக்குயரக்

கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியத்

தள்ளுந் திரைப் பொன்னி தந்தோனும் - தெள்ளருவிச் சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப்

பொன்னிக் கரைகண்ட பூபதியும்

விக்கிரமசோழனுலா - கண்ணி 12-13 என்று பாடுகிறார். அவன் குடகுமலையை வெட்டிப் பிளந்து காவிரியை இந்நாட்டுக்குக்கொண்டு வந்தானாம்;மேற்கே இவன் வெட்டிய வழிக்கு அயல்வழியே போகாதபடி, வழி அடைத்து விட்டானாம். வல்லான் வகுத்ததே வாய்க்கால் ஆயிற்று.

க் குடகு மலையும் புதிதாக, அச்சோழர் குடி சேக்கிழாரது புனைந்துரையில் மிகப் பழையதாகின்றது. சோழன் இப் புதுமலையை இடித்துப் பழைய வழியைத் திறந்து விடுகின் றான்: புதியோர் இயற்றிய குறுக்கு வழிகளை அடைத்து விடு கின்றான். இவ்வாறு சோழன் பெருமையைச் சேக்கிழார் புகழ்கின்றார். புகழ்ச் சோழனாரது வெற்றியைப் புகழ்ச் சோழ நாயனாரது புராணத்திற் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/20&oldid=1559659" இலிருந்து மீள்விக்கப்பட்டது