உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நாடு

11

சேய்மைக் காட்சி:-

3.

"மாமதின் மஞ்சு சூழும்; மாளிகை நிரைவிண் சூழும்; தூமணி வாயில் சூழும்; சோலையில் வாசஞ் சூழும்; தேமல ரளகஞ் சூழும்; சிலமதி தெருவிற் சூழும்; தாமகிழ்ந் தமரர் சூழுஞ் சதமகன் நகரந் தாழ." என, சேக்கிழார் சேய்மைக் காட்சியைத் தொடர்புயர்வு நவிற்சியாகப் புனைந்துரைக்கின்றார். புகழ்ச்சோழனோ கரியானை யேறும் மண்ணுலக வேந்தன். இந்திரனோ வெள்ளானை யேறும் விண்ணுலக வேந்தன். யானையைப்பற்றி விண்ணுல கோடு ஒப்புமை பாராட்ட வந்து, அதனைத் தாழ்த்தி விடு கின்றார் சேக்கிழார். "இன்பவுலகம் என்று விண்ணவர் மகிழ்ந்து திரியும் துறக்கம், இக் கருவூரை நோக்க நம்மெதிரே கீழே தாழ்ந்தே தோன்றுகிறது. கருவூர் அவர்களுரைக் கடந்து செல்கிறது. உயர்த்திப் புகழ்கிறார் என்று கொள் ளாது, கருவூரின் சேய்மைக் காட்சியையே, சேக்கிழார் புனைந் துரைக்கின்றார் எனக் கொள்ளுதல் வேண்டும். கருவூரின் நீண்ட மதில்களின்மேல் அழகிய முகிற்கூட்டங்கள் சூழ்ந்து கிடக்கின்றன.என றன. எனவே, விண்ணாட்டு முகில் வட்டத்தையும் கடந்து செல்கின்றது இக்கருவூர் என்பதாயிற்று. அம் மதிற்குள்ளாக ஓங்கி உயர்ந்த மாளிகைகள், குறுக்கும் நெடுக்குமாக நம்மூரில் இதுபோது காணப்படுவது போலல் லாது, ஒரு நிரையாக நிற்பதே ஓர் அழகு. அம்மாளிகை களோ வானத்தை முட்டி நிற்கின்றன.எனவே,வான வ டத்தையும் கடந்து நிற்கின்றது கருவூர் என்பதாயிற்று. வாயில்கள் திறந்திருத்தலை எதிரே எதிரே காண்கிறோம். வானவிளிம்பில் எழுகின்ற ழுகின்ற தூமணியாம் செங்கதிரோன் வ்வாயில்களூடே திகழ்கின்றான்; வானவழியிற் செல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/21&oldid=1559660" இலிருந்து மீள்விக்கப்பட்டது