உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

அன்பு முடி

மாட்டாது இவ்வாயில்கள் வழியே சூழ்ந்து வருகின்றான் போலும். இவ்வாறு செங்கதிர் வட்டத்தையும் கடக்கின் றது அக்கருவூர்.அவ்வூர் மகளிர் தம் கூந்தலில் தேனோடு திகழும் மலர்களை, அன்றலர்ந்த செவ்வி வாடாது முடித் துள்ளனர். அம்மலர்களின் நறு நாற்றமே விண்ணவர் களது விரும்பியதளிக்கும் பெரும் பொழிலிடையே (கற் பகவனம்) சென்று சூழ்ந்து, விண்மலரின் இன்மணமாகும். தொலைவிலிருந்து பார்ப்பார்க்குப் பொழில்கள் வானளாவி நிற்பன போலத் தோன்றும் அன்றோ? தேமலர் சூடிய கூந்த லால் சூழப்பெற்ற திங்கள்கள் (முகங்கள்) ஈதோ அக்கருவூர்த் தெருவழியே சூழ்கின்றனவே. சேய்மைக்காட்சியில் பெண் கள் முகங்கள் திங்கள் எனத் தோன்றுகின்றன. தெருவில் நடக்கும் இந்நிலையில் திங்கள் வருமானால் இவ்வூர், திங்கள் வட்டத்தையும் கடக்கின்றதன்றோ?

அணிமைக் காட்சி - புறத்தோற்றம்:-

"கடகரி துறையி லாடும்; களிமயில் புறவி லாடும்; அடர்மணி யரங்கி லாடும்; அரிவையர் குழல்வண் டாடும்; படரொளி மறுகி லாடும்; பயில்கொடி கதிர்மீ தாடும்; தடநெடும் புவிகொண் டாடுந் தனிநகர் வளமை யீதால்."4.

எங்கும் இன்பக்கூத்து. மதிலும் மாளிகையும், வாயி லும் மகளிரும், மலரும் மணமும்,பொழிலும், கூந்தலும் காண்கிறோம். மேற்சென்று அணிமைக் காட்சியால் அவ் வூரின் இன்பத்தைப் புகழ்கின்றார் சேக்கிழார். வெள்ளானை யுலகையும் கடந்த இக்கரியானை யுலகாம் கருவூரிலன்றோ யானையை எறிகின்றார் எறிபத்தர். யானையால் அழகு பெற்ற ஊரிலன்றோ யானையை எறிகின்றார்' என்ற குறிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/22&oldid=1559661" இலிருந்து மீள்விக்கப்பட்டது