உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




33

நா டு

13

புத் தோன்றப் புகழ்கின்றார் சேக்கிழார். யானையால் அழகு பெற்ற இவ்வூர், அவ்வழியே இன்பம் கூத்தாடும் கோயிலு மாகக் குலவுகிறது. இன்பம் மிகுந்தபோது அதற்குப் போக்கு வீடாகக் கூத்தே ஆடுவோம். பேரின்ப வடிவான பெரியோனும் பெருங்கூத்தே யாடுகின்றான். இவ்வூரும் இன்ப வடிவினதென்றால், எங்கும் கூத்தெழ வேண்டாவோ? ஈதோ பார்மின். விலங்குகளும் ஆடுகின்றன; பறவை களும் ஆடுகின்றன; மகளிரும் ஆடுகின்றனர்; உயிரில்லாப் பொருள்களும் உவகைக் கடலில் ஆடுகின்றன. களித் துத் திரியும் யானைகள் நீர்த் துறைகளில் இறங்கித் தும்பிக் கையால் " குட குட என நீர் உறிஞ்சிப் பின்னுடம்பில் விசிறி விளையாடுவது, கண்கொண்டு காணத்தக்க காட்சியே யாம். நீர்த் துறைகளில் அத்தகைய களிப்பு மிகுகின்றது. வெட்ட வெளியிலோ, மயில்கள் செங்கதிர்க் கெதிரே பைங் கதிர் எனத் தோகையை விரித்துத் தமது கழுத்தைச் செரு க்கி வளைத்துக் கால் மாறி அசைந்தாடுகின்றன. வெட்ட வெளியும், தண்ணீர்த் துறையும், அவ்வாறாக, ஆறறிவு படைத்த மக்கள் வாழும் இடத்தோ, இயற்கை யழகோடு செயற்கை அழகும் இன்பத்தைப் பெருக்குகின்றன. எழி லார் இளமங்கையர் கூத்தே யாடுகின்றனர். சுற்றிலும் கல் லிழைத்த கூடம் மின்னிப் பொலிகிறது. அதனிடையே இம்மகளிர் ஆடும் ஆட்டத்தின் நிழல், அம்மணிகளில் வீழ் தலும், எதிரொளி வடிவாய்ப்பலநூறு கூத்துக்கள், அம்மணி களினிடையே, நிகழ்கின்றன. அம்மகளிர், கூத்தாடும்போது குதித்தெழுந்தோறும் அவர்கள் கூந்தலிற் சூடிய பூக்களி னின்றும், வண்டுகள் திடுக்கிட்டெழுந்து மேற் பறக்கின்றன; நின்றதும் அப்பூக்களின்மேல் அமர்ந்து விளங்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/23&oldid=1559662" இலிருந்து மீள்விக்கப்பட்டது