உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

1

அன்பு முடி

இவ்வாறு இயற்கையால் ஒளிரும் வண்டும், செயற்கையால் ஒளிரும் மணியும், இவர்களோடு ஒன்றாயியைந்தாட, அறி வொடு அழகு வடிவாம் இம்மகளிர் ஆடும் அவ்விடமன்றோ, இயற்கையன்னையின் உயிர் நிலையாகும்; உலப்பிலா இன்ப ஊற்றாகும். அம்மட்டோ? உயிரிலாப் பொருள்களும் அல் லவா அங்கே ஆடியின்புறுகின்றன. வீடுகளில் கட்டிய கொடி களில் இழைத்த மணிகளினிடத்தே கதிரவெனொளி பாய்கின் றது. அதனால், அம்மணிகளில் எழுந்த எதிரொளி தெருவில் நிழலிடுகின்றது. காற்றில் இக்கொடி யசையுந்தோறும் இவ் வெதிரொளியும் தெருவூடே கூத்தாடும் அன்றோ? இக்கீழ் நிலைக் கூத்திவ்வாறாக, மேனிலைக் கூத்தொன்றும் அங்கு உண்டு. அக்கொடிகள், வானளாவி நிற்றலின், கதிரவன்மீது அசைந்து கூத்தாடுகின்றன. நீரில் ஆட்டம், வானில் ஆட்டம், மணியில் ஆட்டம்,மலரில் ஆட்டம், வெளியில் ஆட்டம், ஒளியில் ஆட்டம், கதிரில் ஆட்டம், தெருவில் ஆட்டம், அறையில் ஆட்டம், பறவையின் ஆட்டம், விலங்கின் ஆட்டம், வண்டின். ஆட்டம், மகளிர் ஆட்டம், கொடியி னாட்டம், எங்கும் ஆட்டம், எல்லாம் ஆடுவன. ஈதே இவ்வூ ரின் இன்பவளம். இதனைச் சேக்கிழார் உலகில் ஒப்பிலா ஊர் என்று கொண்டாடுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/24&oldid=1559663" இலிருந்து மீள்விக்கப்பட்டது