உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஙு.நாயனார்

அகத்தோற்றம்:-

"மன்னிய சிறப்பின் மிக்க வளநக ரதனின் மல்கும். (பாற் பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற் றுன்னிய வன்பின் மிக்க தொண்டர்தஞ் சிந்தை நீங்கா அந்நிலையரனார் வாழ்வ தாநிலை யென்னுங் கோயில்." என்று அகத் தோற்றத்தைக் கூறுகின்றார் சேக்கிழார்.

5:

இன்பமாம் இறைவன்:- ஆட்டமனைத்தும் புறத்தோற் றம். இந்த ஆட்டம் எழுந்தது, உள்ளே பொங்கிய இன்பத்தா லன்றோ? பேரழகுள்ள இடத்தில் பேரின்பவடிவனும் இருப் பான் அன்றோ? இ மை கொட்டுந்தோறும் கட்டழகின் காட் சிக்கு இடையீடு நேர்கின்றது. ஆதலின் இமையாது கண்டு களிக்கும் பேறுபெற்ற மையவர்கள் எங்குள்ளார்கள். தாம் பெற்ற பேற்றிற்கேற்ப, இமை கொட்மாது பார்க்கத் தகும் ஏரெழில்நிறைந்த இடத்தன்றோ இருப்பார்கள். அழகு வழிபாடு செய்யும் அவ்வானவர்கள், இவ்வூரைக் கண்டால் இமைப்போதேனும் பிரிவரோ? தின அருமை நோக்கி, இவ்வூரின் பொன் மதிலைச் சுற்றிச் சூழ்ந்து,அவர்கள், போற் றுகின்றனர். அத்தகைய பொற்பினைக் கண்ட அன்பர்களும் அப்பொற்பால் வலித்திழுக்கப் பெற்றவர்களாய் அவ்வூரில் நெருங்கியுள்ளார்கள். ஊனக்கண் கொண்டு காணும் நிலை யிலா உடனிலையழகைக் கண்டு களிப்பதோடு அமையாது, அதிற் றோய்ந்து அதனுள் ளொளிரும் உண்மையழகையும் காணவேண்டி, ஊடுருவிச் சென்று உள்ளக் கண்கொண்டு காணும் நிலையான உயிர்நிலை யழகையும் கண்டு களிப்ப வர்களல்லரோ அவ்வடியார்கள். அங்கொரு இமையா நாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/25&oldid=1559664" இலிருந்து மீள்விக்கப்பட்டது