உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

அன்பு முடி

இயற்கை யழகு

டம் பெற்றவரல்லரோ அவ்வடியார்கள். வழியே இறைபணி நிற்கின்றவர்கள் ஆதலின், அவர்கள் செயலனைத்தும் திருத்தொண்டேயாம். அவர்கள் எங்கும் அழகைக் கண்டு அவ்வியற்கை யழகாம் இறைவனுக் கடிமை யாகின்றனர்; நான் என்றும் நீ யென்றும் எனதென்றும் உனதென்றும் பேசுவதை மறக்கின்றனர்; இயற்கையோ டொன்றாய் இயைகின்றனரா தலின், அழகுக்கடியராய், அவ் வழகா ம் உலகுக்குமடியர் ஆகின்றனர்; ஆதலினாலே தமக் கென வாழாப் பிறர்க்குரியாளராகத் தலைசிறந்து விளங்குகின் றன ர். அதற்கேற்ப ஆண்டவனும் அவ்வழகிய நிலையாகிக் காட்சி தருகின்றான்; அவர்களது உள்ளங் கவர்ந்த கள் வனாய் (அரன்) அவர்களோ டியைகின்றான். உள்ளும் புற மும் வெள்ளமாய்ப் பொங்கும் அழகிடையன்றோ, ஆண்ட வன் அகனமர்ந்து உறைகின்றான். அழகன்றோ அவனுடைய திருக்கோயில். ஆநிலை என்ற அவனழகார் கோயிலும், அக் கருவூரில், பரந்த பால் திரண்டெழுந்து வெண்ணெயாதல் போல, அழகு திரண்டு எழுந்து விளங்குகின்றது.

6.

பொருட்டிருமறையும் அருட்பெருந் தொண்டும்:- பொருட்டிரு மறைக டந்த புனிதரை யினிதக் கோயின் மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழிபடுந் தொழில ராகி இருட்கடு வொடுங்கு கண்டத் திறையவர்க் குரிமை பூண்டார்க்(கு) அருட்பெருந் தொண்டு செய்வார் அவரெறி பத்த ராவார்." ஊன்றிப் பார்ப்போர்க்கு, உலகின் ஒவ்வொரு துகளும், இவ் வுயர்ந்த பொருளின் உண்மையை மறைவாக எடுத்துக் கூறு கின்றது. இவ்வாறு அவற்றை இயைவித்துத் தன்னருட் பெருக்கால் அத்திருமறை யுண்மைகளை, உலகத்திற்குத் தந் துதவிய தூயோனை, அவ்வாநிலைக் கோயிலில் வழிபடுபவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/26&oldid=1559665" இலிருந்து மீள்விக்கப்பட்டது