உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நாயனார்

17

அந்த எ றிபத்தர். ஒளியும் இன்பமும் அழகுமாம் இவ்வழி யினின்றும் பிறழ்ந்தால், இருளும் மருளும் துன்பமுமாம் வழியேதான் போதல்வேண்டும். எனவே, அம்மருள் வழியை அடைப்பதே, அருள் வழியைத் திறப்பதாகும். அதனை மேற் கொண்டார் எறிபத்தர்.

இருட்கடு ஒடுங்கும் கண்டத் திறையவர்க் குரிமை பூண் டார்:-ஆண்டவன் அருள்நிலை இருந்தவாறு என்னே! என்னே !! பிறர் துன்பத்தைத் தனது இன்பத்திற் கெரிகரும் பாய்க் கொண்டு எரித்துப் போக்கித் துன்பமும் இன்பமும் எல்லாமாய் விளங்குகிறான் இறைவன். துன்பத்திலும் ஓர் இன்பம் காட்டுவிக்கவேண்டி, அதனைத் தக்கதோரிடத்தே யையவைத்து அங்கோர் ஏரெழில் காட்டுகின்ற இறைவன் பெருமை இருந்தவாறு என்னே ! உலகிலே எதனைத் தீயது என்போம். பொருத்தமின்மையே பொங்கு துயராகும். உண விடைவைத்த எருவோ ஒக்காள மாகின்றது. மருக்கொழுந் தின் வேரிடையிட்ட எருவோ, பின்னர்நகைமுகமூட்டும் நறு மணமாகின்றது. கடலிடையே எழுகின்ற கடு, கடவுளுடைய கழுத்தின்கண் கருமணியாய்த் திகழ்கின்றது. பொருத்து வாயறிந்து பொருத்துவிக்கும் இத்தகைய இறைவனது இயற்

வழியே நிற்கின்றவர்களே அடியார்கள். அவர்கள் தம் பொய்த்திறனொழிந்து அவன் மெய்த்திறத்தேநின்று, தம்செய லென ஒன்றின்றி, எல்லாம் அவன்செயலென உணர்ந்துஒழுகு கின்றனர்; அவன் அழகு வெள்ளத்தோடே இயைந்து,புரண் டோடித் தம்முடல் பொருள் ஆவி மூன்றையும் அவனுக்கே உரிமையாக்கி, அவ்வின்ப ஆற்றில் அவற்றைக் கன்னலெனக் கரைக்கின்றனர். இவ்வாறு இறைவனேயாகி இறைபணி நிற் கின்ற அடியார்களது பெருமையை என் என்பது! இவர்களை

2

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/27&oldid=1559666" இலிருந்து மீள்விக்கப்பட்டது