உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அன்பு முடி

விட்டு, இறைவனைத் தேடி வழிபடுதலும் வேண்டுமோ? இவ் வடியார்க்கு அருட்பெருந் தொண்டு செய்வதே போதியு தன்றோ? இவ்வருட் பெருந் தொண்டினைத் தடை நீக்குதல் என்ற எதிர்மறை வழியால் செய்து வருகின்றார் எ றிபத்தர். விதை விதைத்தல் போலக் களைகட்டலும், விளைவுக்கு இன்றி யமையாத தன்றோ?

மழை வளருலகில் ஒரு முழையரி:-

"மழைவள ருலகில் எங்கு மன்னிய சைவ மோங்க

அழலவிர் சடையா னன்பர்க் கடாதன அடுத்த போது

முழையரி யென்னத் தோன்றி முரண்கெட வெறிந்து தீர்க்கும் பழமறை பரசுந் தூய பரசுமுன் னெடுக்கப் பெற்றார்.

7.

இவ்வழகிய ன்ப வாழ்க்கைக்கு இந்நாட்டில் ஏதேனும் தடை உண் ே IT ? மழை வளர, வான் பயிர் வளர, மன்னுயிர் வளரும் இந்நாட்டில், எதை நாடி, நாம் அலைதல் வேண்டும். இவ்வளர்ச்சியினிடையேயே, இயற் கையின் இன்னிசைப்பாடலையும், இறைவனின் அழகிய ஆடலையும்,நாம் காணவில்லையா? இவ்வழியை அறிதலி லேனும் அருமையுண்டோ? மறையாய் விளங்கும் இன்ப அன்பினழகு, இவ்வுலகெங்கும் மன்னிப் பொலிகின்றது; பொங்கி வழிகின்றது. அதனை நாம் சிறிது ஊன்றிப் பார்த் தால், அதனை எங்கும் காண்கின்றோம் அன்றோ! எங்கும் நிலைபெற்ற இவ்வின்ப அன்பாம் அழகொளி, ஒங்கிவளர் கையில், சுடர்த்திரியில் கட்டும் கரியினைத் தட்டி யுதிர்க்க வேண்டாவோ? துன்பத்தையும் தனதெரிகரும்பாய்க் கொண் டு, சுட்டெரித்துத் தூயதாய் ஒங்கும் இவ்வின்பத்தீயின் அழ கினையும், இன்பத்தினையும், மேற்பரவாதபடி எதிர்த்தழிக்க முயல்வார், மறலியினும் கொடிய மறவோராவர்.முழையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/28&oldid=1559667" இலிருந்து மீள்விக்கப்பட்டது