உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நாயனார்

19

வாழும் மடங்கல், முழையினின்றும் திடீர் எனத் தோன்று வது போல, இவ்வின்ப அன்புக்கு ஏதேனும் இடையூறு ஏற் பட்டபோது, சடுக்கென வந்து, அவ்விடையூற்றை அடியோடு களைவர் இவ்வெறி பத்தர்.

தூயபரசு:-அவ்வாறு களை தற்கறிகுறியாக இறைவ னது தூய மழுவையே துணையாகக் கொண்டுள்ளார் எறிபத் தர்; தமக்கொன்று வேண்டி மழுவெடுக்கின்றார் அல்லர். உலகிடை மறையாய் நின்ற இன்ப வழியைப் பின்பற்றி இறைபணி நின்றவராதலின், இவருடைய மழுவிலே பற் றென்ற கறையொன்றும் இல்லை. ஆதலின் அது தூய்மை மிக்க மழுவாகவே விளங்குகின்றது.களை வெட்டியாம்கடவுள் மழுவைக் கையில் எடுத்ததும் இவர்க்கொரு பேறேயன்றோ? இன்ப வழியில் செல்லத் தொடங்கி நின்ற நிலையே ஈது. சென்று முற்றிய நிலையைப் பின் காண்போம். இங்குத் தமக் கென வாழாப் பிறர்க்குரியாளராம் இவர், முழை வாழ் மடங் கல் என விலங்கொடு ஒப்புமை பெற்று அவ்வழியில் இயற்கை யோடு இயைபு பெறுகிறார். இந்நிலையினின்றும் கடவுள் நிலை யை அடைவதனையே சேக்கிழார் இப்புனைந்துரையில் குறிக் கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/29&oldid=1559668" இலிருந்து மீள்விக்கப்பட்டது