உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1

முதற் காட்சி - பூத்தொண்டு

நூ

கூத்து நூல்:- சேக்கிழார், கூத்து நூலும் யாக்க வல்ல பெரும் புலவர்; மன நிலையைச் சொற்கள் கொண்டே உயிர் ஓவியமாக எழுதிக் காட்டும் கைசிறந்த ஓடாவி. அன்பே வடிவான சிவகாமியாண்டார், ஒருதிருமலர்த் தொண்டர். அவர், ஆண்டவனாரது அழகிய மலரொப்பனையைக் கண்டு களிக்க விரைந்து செல்லும் ஆர்வத்தையும், ஆனையானது அவரது பூங்குடலையைப் பறித்தபோது, அதிலிருந்த மலர் களுக்காகப் பரிந்த பரிவையும், அவ்வானையினின்றும் பூங் குடலையைப் பறிக்கத் தடியெடுத்து அடிக்கச்சென்று தப்பித் தரையடித்து வீழ்ந்து அலமரும் நிலையையும், இக் கூத் தின் முதற் காட்சியாகக் கொண்டு, புனைந்துரைக்கின்றார் சேக்கிழார். ஈதே சிவகாமியாண்டாரது ஓவியம் என்க. சிவகாமியாண்டாரின் திருப்பள்ளித் தாமம்:- அண்ணலார் நிகழும் நாளில் ஆநிலை அடிக ளார்க்குத் திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவ னார்தாம் பூப்பறித்(து) அலங்கல் சாத்தி உள்நிறை காத லோடும் ஒழுகுவார் ஒருநாள் முன்போல்."8

"வைகறை உணர்ந்து போந்து புனன்மூழ்கி வாயுங் கட்டி மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக் கையினில் தெரிந்து நல்ல கமழ்முகை யலரும் வேலைத் தெய்வநா யகர்க்குச் சாத்துந் திருப்பள்ளித் தாமங் கொய்து. 9.

"கோலப்பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில் வாலிய நேசம் கொண்டு மலர்க்கையிற் றண்டுங் கொண்(டு) அங்(கு) ஆலய மதனை நோக்கி அங்கணர்க்(கு) அமைத்துச் சாத்தும்

காலைவந் (து) உதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார்.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/30&oldid=1559669" இலிருந்து மீள்விக்கப்பட்டது