உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அன்பு.முடி

இன்பமாய் மலரும்படி நறுமணம் வீசி நலம் சிறந்து நகைத் தாளிகான்று நன்கனம் மலரத் தக்கனவாயும், பறிக்கும். போது முகைவிரிந்தலரும் பூவின் முன்னிலையில் நின்று, போதாய் விளங்குவனவாயும்,பொலிவனவற்றை மட்டும் அவ்விருட்டில், தம் கையால், தொட்டுப் பார்த்தபடியே பறிப்பதைப் பாருங்கள். இவர் இயற்கையோடு இயைந்த இயைபே இயைபு. அலரின் நுட்ப இன்பத்தை ஊற்றறி வால் அறிந்து, இறைவன் வடிவமாம் மெய்யுணர்வெய்தி நின்று, இயற்கையோடு இயைபுண்டு, இன்பம் துய்க்கும் இவருடைய ஐயுணர்வினை என் என்பது! கல்லும் கானாறும் பாடும் கடவுட் பாடல்களை அறியும் புலவர்களைப்பற்றி "ஷேக்ஸ்பியர்" கூறுகின்றது, இத்தகையோரைப் பற்றியே யாம். இவர் கையறிவால் நன் மலர்களின் மென்மையை யறிந் ததுபோல, அம்மலர்கள் விரிந்தெழுகையில் வண்டுகளின் இன்னிசையாய் எழும் பாட்டையும் இனிதே துய்த்து, வண் டொடும் பாடுவார்போலும். வண்டே போல்வார், வண்டுக ளது மலறிவு பெற்று, வண்டு மூசும் நிலையையும் உணர்ந்து, வண்டு மூசுவதால் எச்சிற்படுமுன்னரே பறிக்கின்றனர்; ஆனால் வண்டு மூசும் நிலைதான் மலர்சிறக்கும் நிலையாதலின், அந்த நிலையினழகும் குறையாதபடி முற்றிய நிலையில், வண்டு மூசுதற்கு ஒரிமைப்போது முன்னர்த்தான், பறித்துக் கொள் கின்றனர். ஈதன்றோ ஈங்குள்ள அருமை. நாமும் மலரினைக் காண்போம்; முகர்வோம்; அதன் தேனினைச் சுவைப்போம். இவர்போல அதன் நுட்பத்தை உற்றறியோம். தேமலர் வண்டென வாழ்ந்து,கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும், இவரது கடவுள் வாழ்க்கையின் நுட்பத்தை, என்னென்று புகழ்வோம். அதனை இவர் அறிவார்;

ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/32&oldid=1559671" இலிருந்து மீள்விக்கப்பட்டது