உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பூத்தொண்டு

23

றைவன் அறிவான்; இயற்கை யன்னை யறிவாள்.இம் மூவரும் ஒத்து நின்ற அன்பு வடிவினைச் சேக்கிழார் மிக அழகாக எவ்வாறு எழுதிக் காட்டுகின்றார்.

கோலப் பூங்குடலை:- இறைவனுக்குச் சாத்தும் மல ரைக் கொண்டு செல்லுதற்கென்றே, கைத்திறமனைத்தும் காட்டிக் கண்கவர் வனப்புடைய பூங்குடலை யொன்றனை இவர் முடைந்து வைத்திருக்கின்றார். அன்புவாழ்க்கை வாழ் வோரைச் சுற்றிலும், இவ்வாறு, அழகன்றோ திரை புரளும். உடையிலும் அழகு,ஊணிலும் அழகு, நடையிலும் அழகு, குளிப்பதிலும் அழகு, களிப்பதிலும் அழகு, உடலும் அழகு, பூங்கூடலையும் அழகு; இவரைச் சுற்றி எங்கும் அழகே உள்ளது. அன்புகண் கொண்டு கண்டாலன்றோ அவ்வழகு புலனாகும்.

கடிதினில் வாராநின்றார்:- சிவகாமி யாண்டார் தமது உள்ளத்தில் அன்பு நிறைய நிறையப் பூவை நிறைத்து வைத் திருக்கின்றார். உள்ளத்தும் பூங்குடலையிலும், நிறைந்த அன்பே வெள்ளமாய் பொங்கி வழிந்து, இவரைத் தள்ளிக் கொண்டு போகின்றது. இவர் தூய அன்புகொண்டு விரைந்து செல்கின்றார். ஏதேனும் ஒன்றை வேண்டிநிற்கும் அன்போ ஈது. ஏன் விரைகின்றார்? எதுபற்றி இவர் இறைவனை வழி படுகின்றார்? எதுபற்றி இன்பந்துய்க்கின்றார்? இன்பமே எவற்றிற்கும் முதலும் முடிவுமாயபோது, அது, தனக்கன்றி மற்றொன்றிற்கு முதலாவதேது? வீடும் வேண்டா விறலின் விளங்குகின்ற இப்பெரியார், வேண்டுவது ஒன்றும் இல்லை. மலரின் நுட்பத்தைத் தொட்டுணரும் அவரது திருக்கை, மெல்லிய மலரும் தைவரக்கூசும் மெல்லிய மலர்போன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/33&oldid=1559672" இலிருந்து மீள்விக்கப்பட்டது