உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அன்பு முடி

றன்றோ விளங்குகின்றது. அந்த மலர்க்கையில், முதுமை யின் கொடுமைக்கஞ்சி, தடியொன் றூன்றிக் கோயில் நோக் கிப் போகின்றார் இவ்வன்பர்; இறைவனுக்கு ஏற்ற மாலைகள் சாத்தும்போது வந்துதவுதற்காக விரையு மனத்தோடே, விரைந்து வருகின்றார்.

பூத்தொண்டின் புதுமை:-இவர் அன்பினை என் என்பது! இவர் யாதும் குறையிலர்; யாதும் வேண்டிலர்; அன்பால் உந்தப்பட்டு, மக்கள றிந்தபேரின்பமாம் தூக்கத்தையும், அத னினும் இனிய தாய்த் தாம்கண்ட காட்சியை எண்ணித் துறக் கின்றார்; தடியூன்றித் தட்டித்தடுமாறி நடக்கும் அம் முது மையில் அவ்விருட்டிற்சென்று, குளிர் என்றும் பாராது கோமானின் கோலத்தை எண்ணிக் குளித்தருள்கின்றார். அவ்வொப்பனைப் பொருளை எத்துணைத் தூயதாகக்கொண் டருளுகின்றார் இப்பெரியார்? வண்டு மூசாமலரை வாய் கட்டிப்பறிக்கும் அவ்வன்பின் தூய்மையை என் என்பது கையே துணையாய் மலர் பறிக்கும் கடவுள ன்பை என் என் பது? இன்பத்திற்குப் போக்குவீடாக இத்துணையும் செய்து, அன்பு மணக்கும் பூக்கொண்டு உள்ளத்துண்மைக் கியைந்த வாறு புனைந்த பொய்யாத மெய்யொப்பனையைக் கண்டு களிக் கின்றார் இத்தொண்டர். இன்பத்தில் எழுந்து இன்பத்தில் முடியும் இவ்வழிபாட்டை அன்பு கண்கொண்டு காணுதல் வேண்டும். அப்போதுதான் இவ்வழகு விளையாட்டின் இன்ப நுட்பமும் அன்பின் திட்பமும் புலனாகும்.

யானையின் வருகை:-

-

?

இவ்வாறு சிவகாமி யாண்டார் விரைந்தொரு தெரு வழியே போகின்றார். மேலே யானை வருவதைப் புனைந்து ரைக்கின்றார் சேக்கிழார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/34&oldid=1559673" இலிருந்து மீள்விக்கப்பட்டது