உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பூத்தொண்டு

25

"மற்றவர் அணைய இப்பால் வளநக ரதனில் மன்னும் கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகு மா நவமி நன்னாள்". 11.

"மங்கல விழவு கொண்டு வருநதித் துறைநீ ராடிப் பொங்கிய களிப்பி னோடும் பொழிமதஞ் சொரிய, நின்றார் எங்கணும் இரியல்போக எதிர்பரிக் காரர் ஓடத்

.

துங்கமால் வரைபோல் தோன்றித்துண்ணென அணைந்த (து) அன்

(றே." 12. "வென்றிமால் யானை, தன்னை மேல்கொண்ட பாகரோடும் சென்(று)ஒரு தெருவின் முட்டச், சிவகாமி யார்முன் செல்ல வன்தடித் தண்டில் தூங்கும் மலர்கொள்பூங் கூடை தன்னைப் பின்தொடர்ந் (து) ஒடிச் சென்றுபிடித்(து)உடன் பறித்துச் சிந்த.'

13.

"மேல்கொண்ட பாகர் கண்டு விசைகொண்ட களிறு, சண்டக் கால்கொண்டு போவார் போலக் கடிதுகொண்(டு) அகலப்போக நூல்கொண்ட மார்பிற் றொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி மால்கொண்ட களிற்றின்பின்பு தண்டுகொண்(டு) அடிக்கவந்தார்.

14.

"அப்பொழு(து) அணைய ஒட்டா(து) அடற்களி (று) அகன்று போக மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால் விரைந்துபின் செல்ல மாட்டார் தப்பினர் விழுந்து கையால் தரையடித்(து) எழுந்து நின்று செப்பருந் துயரும் நீடிச் செயிர்த்துமுன் சிவதா என்பார்."

15.

கூத்துநூற் கோலாட்டத்தெழுந்த கடவுட் பிணையல்:- கூத்து நூலிலே வரும் புனைந்துரை வரலாற்றின்போக்கை ஆராய்வோமானால், முதலிலே அவ்வரலாறு பல பிரிவு மக்களின் செயல் களாக நிற்பதனையும், புனைந்துரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/35&oldid=1559674" இலிருந்து மீள்விக்கப்பட்டது