உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அன்பு முடி

வழியே சிக்கலாய் முடிச்சுப் பெறுவதனையும், பின்னர் அது அவர்கள் செயல் வழியே முடிச்சு அவிழ்ந்து வருவதனையும் காண்போம். இப்புனைந்துரையில் யானையைச் சுற்றித்தான் முடிச்செழுகின்றது. மற்றைய கூத்து நூல்கள்போல இப் புனைந்துரையும் ஒரு கோலாட்டமேயாம். கோலாட்டமாடு கையில், மேலிருந்து தொங்கும் கோலக்கயிறு ஒவ்வொன் றையும், ஒவ்வொருவர் பிடித்துக் குறுக்கும் நெடுக்குமாக வெவ்வேறு பிரிந்து,பாட்டிற்கேற்பக் கோலைத்தட்டிச் சுற்றி வருகையில், கயிறு பின்னிக்கொள்ளும். பின்னர், முன் செய்தபடி, பாடிச்சுற்றி வருகையில், அப் பிணையலும் அவிழ்ந்துவிடும். அவ்வாறே புனைந்துரை வரலாற்றிலும் ஒரு கடவுட் பிணையல் பின்னிக் கொள்வதனையும், பின்னர் அவிழ்ந்து விடுவதனையும் காண்கின்றோம். கோலாட்டத்தில் பயின்று சிறந்தவர்களே சிக்கலின்றிக் கட்டவிழ்த்து நிற்க வல்லார். அஃதேபோலத் திருவருட் புலவர்களே, கடவுட் பிணையலைப் பின்னி யவிழ்க்கத் தக்கார். எறிபத்தரது புனைந் துரை வரலாற்றில் யானையைச் சுற்றியே கடவுட் பிணையல் பின்னிக் கொள்கிறது

-

-

பட்டவர்த்தனம்:- இந்த யானையைப் பற்றி முன்னரே கூறினோம். மன்னர் மன்னவன் - வெற்றியன்றி மற்றொன் றறியா மன்னவன் வளவர்தம் பழங்குடி வந்த மன்ன வன் - அன்னவன், பகைவர்மேல் படையெடுத்து, வெற்றி பெற்றுக் கருவூர் என்னும் வளநகரில் வந்து தங்குகின் றான். அவன் கருதி வந்த வெற்றிக்குத் தனிப்பெருந் துணை யாக விளங்குகின்றது கொடிய தொரு யானையேயாம். அஃ தும் அவனது செங்கோல் யானையாகச் சிறந்து விளங்குகின் றது; மன்னவன் வழிபடும் யானையாக மாட்சி பெறுகின்றது.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/36&oldid=1559675" இலிருந்து மீள்விக்கப்பட்டது