உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வம்.

பூத்தொண்டு

27

மங்கல விழவு:-உலகத்தின் ஆற்றலே உலகத்தின் வடி அஃதே இயற்கை யன்னையின் திருவிளையாடல். இவ் வாறு உலகத்தை இயக்கிவைக்கும் இயற்கை யாற்றலைத் தனிப்பெருந் தாயாக ஒன்பதிரவும் வழிபடுவது நம்மூர் வழக்கம். ஆற்றல் வேண்டும் அரசர்க்கு அஃதே பெரிய தொரு திருவிழா. அப்போது ஊரெலாம் அழகொடு பொலி யும். யானையும் குதிரையும் திருக்கோலம் பொலிய ஊர் வலம் வருவதும் வழக்கம். அதனைப் பழைய எருமையூர் எனும் மைசூரில் இன்றும் காணலாம். இத்திருவிழாவின் போது, ஒன்பதாம் நாளன்று, நிறைவிழாக் கொண்டா டாடுவர் மக்கள்.

துறை நீராடிப் பொங்கிய களிப்பு:- சிவகாமியாண்டார் ஒரு தெரு வழியே போகின்றனர். செல்வமும் சீருமாகப் பாராட்டப்பெறும் அவ்வியானை, இன்றைய நாள்,நலம் பெருகும் விழவுக்கோலம் பூண்டு, ஆன்பொருநையாற்றில் நீராடி வருகிறது. களித்துத் திரியும் கருங்களிறு, நீராடிய செம்மாப்பால், களிப்பு மிகுந்து கடாம்பொழிந்து, கடுகி வருகிறதென்றால், அதன் மிடுக்கை என் என்பது!

இரியல் போதல்:- கருமலை ஒன்று ஒடோடியும் வரு வது போல விரைந்து வரும் அவ்வியானையைக் கண்டோரும், அதன் நடையொலியைக் கேட்டோரும், திண்ணென்று திடுக் கிட்டு மன நடுங்கி வயிறு குலைந்து அஞ்சுகின்றனர். ஆங் காங்குத் தெருவில் நின்றவர்கள், யானை வருவதைக் கண்டும் கேட்டும், கால் கொண்டு சென்ற இடத்திற்குக் கடுகியோடு கின்றனர். யானைக்கு முன்பாக, அதனை அடக்கி யாண்டு ஒட்டிவரும் குத்துக் கோலாளர், வழியில் ஒருவரும் நில்லாத வாறு அகற்றிக் கொண்டே, குத்துக்கோலைத் தூக்கிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/37&oldid=1559676" இலிருந்து மீள்விக்கப்பட்டது