உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அன்பு முடி

ஓடோடியும் வருகின்றனர். தடுப்பார் ஒருவரும் இன்றிச் சென்ற விடத்தெல்லாம் தான் நினைத்ததையே செய்து, வென் றியே பெற்று வரும் யானையை, அடக்கியாண்டு ஓட்ட வேண்டியன்றோ,மாவெட்டிகள் அதன்மேல் உள்ளார்கள். ஆனால் நிகழ்கின்றதென்ன? அம் மாவெட்டிகள் வழியே, தான் செல்லாது, தன் வழியே அவர்களைக்கொண்டு செல் கிறது, அவ்வியானை; சிவகாமியாண்டார் செல்லும் தெருவிற் குள் புகுகிறது.

எவ

சிந்துபூந்தெரு :- முதுமைக்கோர் ஊன்றுகோலாய்,அவ் வன்பரால் தாங்கப்பெற்ற தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த தடியிலே, பூ நிறைந்த பூங்குடலையைத் தொங்கவிட்டுக் பூ கொண்டு, சிவகாமி யாண்டார் முன்னே செல்கிறார். ரும் ஒடி யொளியுமாறு விரைந்துவரும் அவ்வியானை,இவ ரது பூங்கூடைமேல் நாட்டமாய், இவரைப் பின்பற்றி யோடி வந்து, அக்கூடையைச் சடுக்கெனப்பிடித்து, பிடித்த நிலையும் பறித்த நிலையும் ஒன்றாமாறு, வெடுக்கெனப் பிடுங்கியபோதே த, கீழே மலர்களைச் சிந்துகிறது. காண்கின்றார்கள், யானையின் மீதேறிய மாவெட்டிகள்; மேலொன்றும், தீங்கு நேராதபடி, அவ்வியானையை அப்புறத்தே ஓட்டிக்கொண்டுபோகின்றனர். அஃதும் எளிதில் ஆவதோ? தம்மையும் சுழற்றி யடிக்கும் சூறாவளியைத் தம் வழியே திருப்பிக் கொண்டு செல்வது போல, இக்களிற்றினை உடன்கொண்டு விரைந்தகலச் செல் கின்றனர் அம்மாவெட்டிகள். அருமையினும் அருமை யன்றோ அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/38&oldid=1559677" இலிருந்து மீள்விக்கப்பட்டது