உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




௫. முதற்காட்சி (முடிவு) - அன்பு வெள்ளம்

தரையடித் தெழுதல்:-இமைப்போதில் நிகழ்ந்த இதனைப் பார்க்கின்றார் சிவகாமியாண்டார். பூமலர்போனால், புனித ஒப்பனையைக் காண்பது எங்ஙனம்! அதனை எண்ணிப் பதை பதைக்கின்றார் அவ்வன்பர். மனம் கொந்தளித்துப் பொங்கு கிறது; பொங்கிவழிகிறது.அஃதே வெள்ளமாய் ஓடுவதுபோல ஓடுகிறார் முதுமை மிக்க சிவகாமியாண்டார்; களிப்பொடுசெல் லும் களிற்றின் பின்னே, தடிகொண் டடிக்கவேண்டி ஓடு கிறார். அத்தகைய களிற்றை இத்தகைய கிழவனாரோ பிடிக்க முடியும் அருகே அணைய வொட்டாதபடி, அவ்வியானை அகன்று போகின்றது. உலக மயக்கென்பதே இன்றி, ஒன் றனையும் வேண்டாது, அன்பு வேண்டி அன்பு பாராட்டும் திருத்தொண்டரது அன்பே அன்பு. ஆனால் மூப்பில் மூழ் கிய இவர், களிப்பில் மூழ்கிய களிற்றைப் பின்தொடர இய லுமோ? இயலவில்லை. ஓடுகின்ற ஓட்டத்தில் இவர் கால் தவறி விழுகின்றார்; தரையடித் தெழுகின்றார். துயரத்தைச் சொல்ல முடியுமோ!

வரது

சிவதா! சிவதா!:- தம்மாலாவதொன்றின்மையின், தம் தலைவனிடம் முறையிடுகின்றார் அத்தொண்டர். பூங் குடலையை, இவர் வாங்க முடியாமற் போகவே, பொன் னருளே வந்து வாங்கித் தருதல் வேண்டும் என்றெண்ணு கின்றார். அஃதே அவருடைய உறுதிப்பாடு. சிவநெறி நின்று, சிவப்பேச்சே பேசிச் சிவச் செயலேசெய்து, சிவனையே எண்ணுவார், வாழும்போதும் வாடும்போதும் 'சிவனே' என்று தம்மையுமறியாது சொல்லிச் செல்வர். "நன்மையை வளர்ப்பவனே' என்று பொருள்படும் 'சிவதா' என்ற திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/39&oldid=1559678" இலிருந்து மீள்விக்கப்பட்டது