உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

அன்பு முடி

மொழியே அவர் வாயினின்றும் மலர்ந்தெழுகிறது. "சிவனே பூங்குடலையை நிறைத்துத்தா" என்றும் அஃது இதுபோது பொருள்படுதல் காண்க. இறைவனை வேண்டி இவ்வாறு உள்ளமுருகிக் கதறுகின்றார் இப்பெரியார்.

"களியானை யின்னர் உரியாய் சிவதா! எளியார் வலியாம் இறைவா சிவதா! அளியார் அடியார் அறிவே சிவதா!

தெளிவார் அமுதே சிவதா! சிவதா!"

16.

"இறைவனே! இதுபோது என்னுடைய பூங்குடலை யைப் பறித்துக்கொண்ட இவ்வானையைப்போல, முன்னொரு நாள், உலகிற்குத் தீங்கு புரிந்து களித்துத் திரிந்தது ஒரு யானை; உன்னையே எதிர்த்துக்கடவுளறிவாம் அன்பறிவிலாது தமக்கெனவே வாழ்ந்த தகுதியிலாரின் தாருக வனத்தார்) செருக்கிற்கே ஒர் அடையாளமான அவ்யானையைக் கொன்று ரித்து, அதன் உரியினை ஓர் அருள் அடையாளமாகக்கொண்ட வனன்றோ நீ. அவ்வானைத் தீங்கை ஒழித்த நீ இவ்வானைத் தீங்கினையு மொழித்துப் பூங்குடலையை நிறைத்துத் தந் தருள்க. எளியாருக்குத் தோன்றாத் துணையாகிய நீ யில்லையா யின், எளியாரை வலியார் விழுங்காரோ. யானும் எளியேன். வலிய யானையினும் வலியனாய் வந்து பூங்குடலையை நிறைத் துத் தந்தருள்க. அன்பராம் அடியார் தாம் ஒன்றும் வேண்டார். அவர்க்கு வேண்டுவனவற்றை அறிந்தருளி, அவரது அறிவாய் நின்று அவர்களை இயக்கிவைக்கும் நீ, எனக்குள்ளும் அறிவாய் விளங்குதலின், யான் வேண்டுவதனை நீ அறிவாய். யான் இது வேண்டும், அது வேண்டும் என் றுன்னைக்கேட்கவும் வேண்டுமோ ? பூங்குடலையை நிறைத் துத் தந்தருள்க. உனது அன்பு வடிவத்தைத் தெளிவாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/40&oldid=1559679" இலிருந்து மீள்விக்கப்பட்டது