உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அன்பு வெள்ளம்

35

என்றும் பொருள்படுமன்றோ! ஆதலின் அந்நிலை நின்ற அடி யார் செய்வன எல்லாம் அவனுகந்தனவே யாம்.

அன்பு மலர்:-மலர்த்தொண்டெனச் சிவகாமியாண் டார் செய்கின்றதுதான் யாது? உயர்ந்ததொரு கொள்கையி னையே இம்மலர்த் தொண்டு சுட்டுகின்றது. உலகத்தையும் கடந்துநிற்கின்ற அருளையும் (கங்கை) அறிவையும் (சந்திரன்) அழகாக இயையவைத்து, அவற்றிற்கும் மேற்சென்று ஒளிர் வது, அன்பு மலரே யாகும். இவ்வுயரிய அன்பாகவே, தமது மலர்களைக் கருதுகின்றாரே யன்றி, வெறும் பூக்களாக எண் ணுகின்றிலர் அத்தொண்டர்.

"பூமேல் அயனறியா மோலிப் புறத்ததே நாமே புகழ்ந்ததனை நாட்டுவோம் - பாமேவும்

ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே கூத்துகந்தான் கொற்றக் குடை.'

என்ற இடத்தே, பட்டினத்தடிகள், இறைவனது அறவாழி வடிவமாம் வெண்கொற்றக் குடை, அவனது முடியைக் கடந்து நின்றதாதலின், அறநிலைக் கடங்கியே ஆண்டவன் தன்னருளால் அமைந்துளான் என்று புனைந்துரைக்கின்றார். சிவகாமியாண்டாரோ, அத்திருமுடியைக் கடந்தும் ஒளிர்

அன்பு மலரே எனக் கொண்டு வழிபடுகிறார். வீடும் வேண்டா விறலினர், வீட்டையும் கடந்தன்றோ நிற்கின்ற

னர்.

இன்ப அன்பே இறைவனழகு:-சிவகாமியாண்டார் அறத்தினையோ, சேவடியின் செம்மை நிலையாகக்கண்டு வழி படுகிறார். அடியார்க் கறவழியில் நின்று, இன்பமூட்ட வேண்டி, உலகிடை இயங்கிக் கூத்தாடும் திருவடியினது நிலையை, அறமும் அழகும் இன்பமுமாய் இயைந்த அடிநிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/45&oldid=1559684" இலிருந்து மீள்விக்கப்பட்டது