உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அன்பு முடி

திருமுடி. இறைவனது திருவடியோ மறலியைக் கடந்து மகிழ்ச்சியே வடிவாம் திருவடி; அந்நிலையிலும் செந்நிலை பிறழா அறவாழியான திருவடி; சிவப்பு மாறாதே அழியாது அழகாந் திருவடி. இன்பமும் அறமும் அறிவும் அழகு மாம் திருவடியும், அருளொடு அழகும் அறிவுமாம் திரு முடியும், கொண்டு, உலகூடே ஊற்றெடுத்து வெள்ளமாய்ப் புரளும் அழகினையன்றோ, சிவகாமி யாண்டார் வழிபடு கின்றார்.

அழகு வழிபாடு:-மேலும் அழகாய், கீழும் அழகாய் நிறைதலின் அவ்வடிவே அழகு என்க. இப்பெரும்பொருளை விழுங்கித் தன்னுள்ளே அமையக் காண்கிறார் ஆதலின்,

உல

வருடைய அன்பு, இறைவனையும் உள்ளடக்கி, நிற் கின்றது. இவனை அடையும் நெறி அஃதேயாகும். கையும் கடந்து நின்றவனை, உலக அறிவால் உலகை யளந் றிந்தவர்கள், எவ்வாறு அறிவர்? அனைத்துலகையும் ஆளும் அரசனை, அவனது பால்மணமாறாத பச்சிளங் குழவி காலால் எட்டி உதைக்கின்றது. அது பேரின்பமென அவ னும் அகமகழ்கின்றான். உள்ளத்தோடுள்ளம் ஒன்றாகி றது. ஒற்றுமை நிலையே உவகைக் கடலாகும். இஃது அன் பினால் இயைந்ததோர் இயைபு. அவ்வன்பு நெறியிலே நின் றால், குழவி செய்வதனைத்தும் இன்பமாதல்போல, நாம் அறிந்தபடி செய்வன எல்லாம் திருப்பணியாய், அக்கடவு ளுக்கேற்றன ஆகின்றன. நான் என்றும்,நீ என்றும், பேசும் பேச்சு, பொருளற்று நின்ற ஒற்றுமை நிலையில், நானும் நீயும் அவனும் ஒரு பொருளையே யன்றி வெவ்வேறு பொருள் களைத் தனித்தனிச் சுட்டுவதில்லை. அவ்வொற்றுமை நிலையில் 'நானுகந்தது' என்றால், 'நீயுகந்தது' என்றும் 'அவனுகந்தது'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/44&oldid=1559683" இலிருந்து மீள்விக்கப்பட்டது