உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அன்பு வெள்ளம்

33

பூங்குடலையைத் தந்தருள்க” என்று கதறுகின்றார் அம்மெய் யன்பர். அந்தணர்கள், வடமொழி வல்லவர்களாதலின், வட சொற்கள் பயின்றுவரப் பேசுவர். அதற்கிணங்கச் சிவகாமி யார் 'சிவதா' எனக் கதறுதல் காண்க. பார்ப்பனரைப் பார்ப் பனர்போலவே பேசவைக்கும் கூத்து நூனுட்பத்தைச் சேக் கிழார் நன்கறிவர். இம்முறை யீட்டில் அவலக் கவலைக் கையாறு என்ற நிலைகள் முறையே வளர்ந்துவர, முடிவில் “யான் யார்” எனச் செயலற்று அன்பர் நிற்பதும் காண்க.

அடியும் முடியும்: - இம்முறையீட்டின் வழியாகச் சிவ காமியாண்டார், சிவபெருமானை எங்ஙனம் வழிபட்டார், என்ற உண்மையை, அவர் வாய் வைத்தே, சேக்கிழார் விளக்குகின்றார். என்றும் முடியாத பொருள், முடியும் எவற்றிற்கும் தானே மூடிவாய் விளங்கும் பொருள், எப் பொருளும் முதல் தோன்றுவதற்கு முன்னேயும் `நின்று, அவற்றிற்குத் தானே முதலாகியும் ஒளிர்கின்ற பொருள், இத்தகைய பொருள்,எங்கும் பரந்து, என்றும், எல்லா மாய் நிற்றலின், இதனிடையே நாமும் சிக்க, நம்மிடை இஃ தும் சிக்கிக் கொண்டுள்ளது. இவ்வியைபு பெற்ற இன்பப் பொருளையே வழிபடுகிறார் சிவகாமியாண்டார். அவர் வழி படும் வடிவம் யாது? அடிமுடியைப் புனைந்துரைத்து அவ்வடி வத்தின் பெருமையைச் சேக்கிழார் விளக்குகின்றார். உணர்ந் கறியலாகாதபடி, உலக முழுதுமாய் நிற்கும் கடவுட் பிணைய லொன்றுண்டு. உணர்வு கொண்டு நோக்கும்போது என்ன காண்கிறோம்? அப்பிணையல் முறைய, அதிலிருந்தும் தெளிந் தெழுந்து ஒரு வெள்ளம் புரள்கின்றது. அஃதே அருள் வெள்ளப் பேராறு. அங்கொரு சுடர்க்கொழுந்தும் மின் னிப் பொலிகின்றது. அஃதே அறிவாம் பிறையாகும். ஈதே

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/43&oldid=1559682" இலிருந்து மீள்விக்கப்பட்டது