உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அன்பு முடி

"தஞ்சே சரணம் புகுதுந் தமியோர்

நெஞ்சேய் துயரம் கெடநேர் தொடரும்.

மஞ்சே யெனவீழ் மறலிக் கிறைநீள்

செஞ்சே வடியாய் சிவதா! சிவதா!

18.

"எளிதே அடைக்கலம் என்று நின்னடியிற் புகுந்த தன் னந்தனியனாம் சிறுவன்மீது, (மார்க்கண்டன்) கருமுகில் என வீழ்ந்த கூற்றுவனுயிர் குலையவும், அச்சிறுவனது நெஞ்சு நிறைந்த துயரம் ஒழியவும்,சிறிதளவே நீண்ட செஞ்சே வடிவாய்! குழவியின் குழைந்த மனமே வேண்டுவது. அந் நிலையே அருள்நிலை. அந்நிலையிலன்றோ கூற்றம் குதித்தலும் கைகூடும்? சாவா நிலையானவனே! நினது குழவியாம் எனது துயர் மட்டும் கெடாதிருப்பதோ? பூங்குடலையை நிறைத்துத் தந்தருள்க.

"நெடியோன் அறியா நெறியார் அறியும்

படியால் அடிமைப் பணிசெய்(து) ஒழுகும் அடியார் களில்யான் ஆரா அணைவாய்

முடியா முதலாய் எனவே மொழிய."

19.

"ஊனக் கண்கொண்டு உலகனைத்தையும் அளந்தறிந் தோர் அறிந்த உலகவழி ஒன்று. (நெடியோன்] அப்புறவறி வால் அறியலாகாத அன்புலக வழி வேறு. அந்நெறியே செல் கின்றனர் நின்னடியர். அன்னோர், இப்புறவறிவின்றியும் தம் மன்பறிந்தபடி, தொழில் புரியும்போது அவை எல்லாம், திருப்பணியாகின்றன. அத்தகைய அடியார்களில், யான்யார், எனக்கருதி இங்கு என்னைக் காத்தருள வரப்போகிறாய். முடியா முதலானவன் நீயேயாதலின் உன்னிடையே சிக்கிய யான் உன்னின் நின்றும் தப்பும் வழியேது? வேறொரு துணை யினி மறுமைக்கும் காணேன். ஆதலின் நீயே வந்தருளிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/42&oldid=1559681" இலிருந்து மீள்விக்கப்பட்டது