உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அன்பு வெள்ளம்

37

நெறியின் வன்மையே ஈது. எளியார்க்கு வல்லவன் அவனே யன்றோ? அவன் வலிவே இவர் வலிவாகும்.

வாழ்ந்து நின்றாரோ:-இத்தகைய முறையீட்டை இறை வன் கேளாமற் போவானோ? இறைவன் இதனைக் கேட் டுப் பூங்குடலையை நிரப்புவதனைப் பின்னர்க் காண்போம். இவ்வன்பர் இவ்வாறு வாடுதலும் தகுமோ? இவை யனைத் தும், கண் மயக்கே என்று, திருவருளே பின்னர்க் கூறி, எதிர் நிற்கிறது. ஆனால், இதுபோது என்ன தோன்று கிறது. மலரைப் பறிகொடுத்தார்; மலரே இவருடைய அன்பு; ஆதலின் அன்பைப் பறிகொடுத்தார்; அன்போ இவருயிர் ; ஆதலின் உயிரைப் பறிகொடுத்தார்; எனவே செத்தாற்போல நிற்கின்றார் சிவகாமியாண்டார். பூங்கூடை நிறைந்திராமற் போனால், இவர், இறந்துபட்டே நிற்பர் என்பதே சேக்கிழாரது புனைந்துரை. பின்னே, இறை வனது திருவருளால், பூங்கூடை நிறைந்தபோது, சிவகாமி யாண்டாரைப் புனைந்துரைக்கும் சேக்கிழார், இவரை “வாழ்ந்து நின்றார்” என்று புகழ்தல் காண்க. நிறையாக்கால், வாழா திறந்திருப்பர்' என்பது போதர வில்லையா? அன்பின் ஆழத்தை என் என்பது? அன்போடியைந்த நிலையில் அன்பழிய அன்பரும் அழிவர். ஈதே அகப்பொருள் உண் மை. எனவே, அழகொப்பனையையும் அன்பையுமே இழந் தார் என இவர் நின்றாரேயன்றி, மலரை இழந்தார் என நிற்கவில்லை. இவர் மலரிலும் அன்பே காண்பார்; அதுபற்றி யன்றோ உயிரிழந்தாரைப்போல நிற்கின்றார். சிவகாமியாண் டாரது அன்பு வெள்ளத்தின் அழகிய ஓவியம் ஈது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/47&oldid=1559686" இலிருந்து மீள்விக்கப்பட்டது