உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ரண்டாம் காட்சி - எரிமலை

கொலைமழு எடுத்து வந்தார்:- இனி, இரண்டாங் காட் சியில் எறிபத்தர் என்னும் எரிமலையின் ஓவியத்தைக் காண் கிறோம்.

"என்றவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வரா

நின்றவர் கேளா மூளும் நெருப்புயிர்த்(து), அழன்று பொங்கி மன்றவர் அடியார்க்(கு) என்றும் வழிப்பகை களிறே யன்றோ கொன்(று) அது வீழ்ப்பன் என்று கொலைமழு எடுத்து வந்தார்."20 எறிபத்தரது அன்பு நிலையை முன்னரே சேக்கிழார் முன்னுரையாகக் கூறுகின்றமை கண்டோம். சிவகாமி யாண்டாரது எ திரே அத்தகைய எறிபத்தர் வருகின்றார். சிவகாமியாண்டாரது நிலைமையை யார் கண்டாலும் மனம் குழைவர். எறிபத்தர் கண்டால் என் ஆவர்? எரியாவர். சிவகாமியாண்டாரது முறையீடு காதில் விழுகின்றது.எ பத்தர் அழல் வடிவமாகிறார்; நெருப்பு மேலும் மேலும் மூள, அந்நெருப்பையே மூச்சு விட்டு நிற்கின்றார். மேன் மேலும் மூளும் தீ பொங்குகிறது. "இன்பக் கூத்தாடும் ஆண்டவனையே அழிக்க அன்றொரு யானைவந்தது. அன்பு வழி நின்ற அடியாரை அழிக்க இன்றொரு யானை வந்தது. இவ்வாறு யானையன்றோ ஆண்டான் நாளிலிருந்து சிவனடி யார்க்கு வழி வழிப் பகையாகி வருகின்றது. ஆண்டவன் அன்று கொன்றதுபோல, அடியேன் அடியேன் இன்று கொன்று வீழ்த்துவேன்" எனத் துணிகிறார் எறிபத்தர். இறைவனையே எண்ணி வாழ்வார்க்கு, அறச்செயலும் அவன் செயலையே நினைப்பூட்டும்; மறச்செயலும் அவன் செயலையே நினைப் பூட்டும். துணிந்ததும், கொலைமழுவானது தோன்றுகிறது. கொல்லாது விடாத மழுவினை ஏந்தி வருகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/48&oldid=1559687" இலிருந்து மீள்விக்கப்பட்டது